நெல்லை மாநகராட்சி மேயர் பிரச்சினை தொடர்பாக பேசி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணனை மாற்ற வேண்டும் என்று 55 கவுன்சிலர்களில் 35 திமுக கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைச்சர் கே.என்.நேருவை இன்று மாலை சந்திக்கின்றனர்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ;இந்த பிரச்சினை பேசித் தீர்க்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் சிறு சிறு பிரச்னைகள் உள்ளன. அவர் திமுக மேயர் என்பதால் பேசி சுமூக தீர்வு கண்டுதான் ஆகவேண்டும்’ என்று தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“