Tirunelveli Deputy Collector Sivaguru Prabhakaran IET live : திருநெல்வேலியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பம்பரமாக சுழன்று வருபவர் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். ஊரடங்கு உத்தரவின் அவசியம் என்ன? மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமானது? லாக் டவுன் தொடர்ந்து நீடிக்குமா? வைரஸை கட்டுப்படுத்த நெல்லை நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன? உள்ளிட்ட வாசகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.
இன்று மாலை சரியாக 6 மணி அளவில் நேரலையில் வரும் அவரிடம் நீங்கள் கேக்க விரும்பும் கேள்விகள் என்ன என்பதை கீழே எங்களுக்கு கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். இன்று மாலை சரியாக 6 மணிக்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான். எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ -க்கு செல்லுங்கள். சிவகுரு பிரபாகரனிடம், கொரோனா தடுப்பிற்காக இந்திய அரசு, தமிழக அரசு, நெல்லை நிர்வாகம் செய்துவரும் நடவடிக்கைகள், நீங்கள் அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் என அனைத்தையும் கேட்கலாம்.
மேலும் படிக்க : சிகிச்சை அளித்ததால் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்… மீண்டு வந்து அதே வார்டில் சேவை!