திருநெல்வேலி திமுக மேயராக சரவணன் இருந்துவருகிறார். இவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்-க்கு கடிதம் எழுதினர்.
2023 டிசம்பர் 6ஆம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், “மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர கோரியிருந்தனர்.
காரில் புறப்பட்ட கவுன்சிலர்கள்
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இன்று (ஜன.12,2024) வாக்கெடுப்பு நடந்தது. இந்த நிலையில் நேற்றே, (ஜன.11,2024) பாளையங்கோட்டை எம்எல்ஏ தலைமையில் ஒரு கவுன்சிலர் குழுவினர் புறப்பட்டனர்; மற்றொரு கவுன்சிலர் குழுவினர் நெல்லை மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் புறப்பட்டனர்.
இதனால் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
மேயர் சரவணணை நீக்க வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தப்பினார் மேயர் சரவணன்
இந்த நிலையில், இன்று நடந்த நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கம் தென்னரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
எனினும், அதுவும் தோல்வியில் முடிந்தது. சுமார் 30 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“