Tirunelveli Fame Iruttukadai Halwa owner Hari Singh committed suicide : தமிழகத்தில் இனிப்பிற்கென்று ஒரு பாரம்பரியத்தையும் ஒரு வரலாற்றையும் உருவாக்கியதில் திருநெல்வேலி அல்வாவின் பங்கு மிக முக்கியமானது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே அமைந்திருக்கும் இருட்டுக் கடையில் அல்வா வாங்குவதற்காகவே காத்திருக்கும் கூட்டம் அதிகம்.
திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இக்கடையின் உரிமையாளர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2011ம் ஆண்டின் போது தன்னுடைய கடையில் பணியாற்றும் ஹரி சிங்
இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாளையம்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனை முடிவுகள் இன்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க : ஒரே கொரோனா வார்டு… அடுத்தடுத்து இரு தற்கொலை! – பதறிய கேரள சுகாதாரத்துறை
அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மனமுடைந்த அவர் பயத்தின் காரணமாக வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். இருக்கடை அல்வா தயாரிக்கும் குடோன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil