நடந்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற முதல் 2021- 22 ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோயில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
2023-2024, 2024-2025 என மூன்று ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 திருக்கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்றுவரை நெல்லை மானூர் அம்பலவானசுவாமி கோவிலுடன் சேர்த்து 2,098 கோவில்கள் குடமுழுக்கு நடந்துள்ளது . இன்று மட்டும் 55 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோவில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் திருத்தேர் பராமரிப்பு, தேர் கூடம் அமைத்தல், தெப்பக்குளம் பராமரித்தல் என நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது.
மானுர் அம்பலவான சுவாமி கோவிலுக்கு செந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்குவிடப்பட்டு அந்த தொகை கோவிலின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 திருக்கோவிலுக்கும் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 திருக்கோவில்களுக்கும் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 805 திருக்கோவிலுக்கு சொந்தமான 6,703 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6,853 ஏக்கர் நிலம் திமுக ஆட்சியில்தான் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இடங்களில் திருக்கோவிலின் பெயர்கள் இடம் பெறும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் 92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. 59 கோடி ரூபாய் செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. 11 கோடி 93 லட்சம் செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. 29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். ஒன்பது வெள்ளித் தேர் சுமார் 27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. 120.33 கோடி செலவில் 220 திருக்குளங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது
321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது.
86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதியில் கட்டப்பட்டுள்ளது
136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள் 500 வீடுகள் அர்ச்சகர்கள் திருக்கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
1,530 கோடி ரூபாய் செலவில் திருச்செந்தூர், பழனி உட்பட 19 திருக்கோவில்களில் பணிகள் நடந்து வருகிறது தொடர்ந்து. திராவிடமாடல் திமுக ஆட்சிதான், இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராணி ஸ்ரீகுமார், ராபர்ட்புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ராஜா, மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“