நெல்லையில் 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல்; தனியார் கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை

நெல்லையில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி; தனியார் கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்; மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மூடல்

நெல்லையில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி; தனியார் கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்; மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மூடல்

author-image
WebDesk
New Update
nellai college rat fever

நெல்லையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்லூரியை ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாடு காரணமாக 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நெல்லை மேலத் திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூரை சேர்ந்த மாணவர்களும் படிப்பதால் இங்கேயே தங்கி இருந்து படிப்பதற்காக அவர்களுக்கு தங்கும் விடுதியும் கல்லூரி உள்ளேயே செயல்பட்டு வருகிறது. 

கல்லூரியின் அருகே நம்பியாற்றில் இருந்து உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர், உணவு தயாரிப்பது உள்ளிட்ட கல்லூரி பயன்பாடுகளுக்காக எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் சேகரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் இக்கல்லூரியில் பயிலும் உவரியைச் சோ்ந்த மாணவருக்கு தொடா் தலைவலி, காய்ச்சல், உடல் வலி என இருந்ததால் கன்னியாகுமரி மாவட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் எலிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்த மாணவா்களை நேரில் சந்தித்தபோது, மேலும் 7 பேருக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. அவா்களது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது கல்லூரி தங்கும் விடுதிகள், உணவு தயாரிக்கும் உணவு கூடங்கள், குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் தீவிர ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது, வளாகங்கள் சுகாதாரமில்லாமல் இருப்பது உறுதியானது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் குறித்தும் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதிலும் சுகாதாரம் இல்லாத தண்ணீரை பயன்படுத்தியது தெரிந்தது. 

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி உத்திரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட 15 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களது ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி சோதனை செய்தனர். அதில் அவர்களுக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். தற்போது 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், கல்லூரியையும் சுத்தப்படுத்துமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

Fever Nellai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: