வி.எம்.சத்திரத்தில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கணக்கெடுப்பும் , மூர்த்தி நயினார் குளத்தை தூய்மை செய்யும் பணியும் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
Advertisment
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்தில் வி.எம்.சத்திரம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரினை மேம்படுத்தும் நோக்குடனும் பகுதியில் உள்ள சுற்றுச்சூழலையும், பல்லுயிர்ச் சூழலையும் பாதுகாக்கும் வண்ணமும் வி.எம் சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் இயங்கி வருகிறது.
இந்த டிரஸ்ட் ஆனது தொடர்ந்து பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியும் வி.எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து மூர்த்தி நயினார் குளத்தை தூய்மை செய்தனர். இதனைத் தொடர்ந்து வி.எம்.சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் உதவியுடன் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவானது குறுங்காட்டில் வைத்து நடைபெற்றது. துவக்க விழாவில் திருநெல்வேலி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் க. செல்வன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் புஷ்பலதா வித்யா மந்திரி பள்ளி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“