நீர் வளம் காக்க களமிறங்கிய மாற்றத்திற்கான மாணவர் படை
நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான சைக்கிள் பேரணி இன்று (29/10/22) வி.எம்.சத்திரத்தில் நடைபெற்றது.
Advertisment
நெல்லை நீர்வளம் அமைப்பு, புஷ்பலதா வித்யா மந்திர், இ.எப்.ஐ, ஹாட்ஃபுல்னஸ் மற்றும் வி.எம்.சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் சார்பில் திருநெல்வேலி வி.மு.சத்திரத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது மாணவர்களுக்கு நீர்நிலைகள் முக்கியத்துவம் மற்றும் நெல்லை நீர்வளம் அமைப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் புஷ்பலதா வித்யா மந்திர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
Advertisements
இந்த சைக்கிள் பேரணியை திருநெல்வேலி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் க.செல்வன் கொடியை அசைத்து துவங்கி வைத்தார். மேலும் வி எம் சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் , இ எப் ஐ, ஹாட்ஃபுல்னஸ், நெல்லை நீர்வளம் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.