திருநெல்வேலியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு பகுதியில் கோயில் கொடை திருவிழா நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், விழாவில் திடீரென ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையல், சம்பவ இடத்தில் குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து முதற்கட்ட தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“