அதிகமான பயணிகள் விடுமுறை நாட்களில் பயணம் செய்வதால், திருநெல்வேலியிலிருந்து, தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ரயில் இன்று இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விடுமுறை காலம் என்பதால் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். இதனால் திருநெல்வேலியிலிருந்து, தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இன்று முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலில், 2 ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 ஜெனரல் பெட்டிகள், 2 செக்கண்ட் கிளாஸ் ரயில் பெட்டிகள் உள்ளது.
இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திருச்சி, மயிலாடுதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, வழியாக தாம்பரம் சென்றடையும். மேலும் இது ஒரு வழி ஸ்பெஷல் ரயில் என்பது குறிப்பிடதக்கது.