Advertisment

திருப்பத்தூர் கோயில் திருவிழாவில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கக் கோரி பேனர்

திருப்பத்தூர் சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கக் கோரி வைக்கப்பட்டுள்ள பேனர்.

author-image
WebDesk
New Update
Tiru bann8.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மத்தியில் காங்கிரஸ் உடன் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 

Advertisment

இந்நிலையில் கோயில் திருவிழாவில்  இந்தியா கூட்டணியை ஆதரிக்கக் கோரி வைக்கப்பட்டுள்ள பேனர் கவனத்தை ஈர்த்துள்ளது. திருப்பத்தூர் பெரியாங்குப்பம் அருள்மிகு சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இது அங்கு பிரபலமான கோயில் ஆகும். இங்கு மாசி திருவிழா நடைபெறுகிறது.

இந்நிலையில், கோயில் திருவிழாவில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பக்த கோடிகள் வேண்டிக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று வாசகம் இடம்பெற்றுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் சிலரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த பேனர் யார் வைத்தது என்று தெரியவில்லை. எனினும் இந்த பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupattur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment