ஸ்டாலின் வீட்டில் திருப்பதி வேத பண்டிதர்கள்: மந்திரங்கள் முழங்கி வாழ்த்து

Tirupati Devasthana Vedic Scholars met CM Stalin இந்நிகழ்வு, இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற குற்றச்சாட்டை தகர்த்தியுள்ளது.

Tirupati Devasthana Vedic Scholars met CM Stalin blessed with Prasad Tamil News
Tirupati Devasthana Vedic Scholars met CM Stalin Tamil News

Tirupati Devasthana Vedic Scholars met CM Stalin Tamil News : தமிழ்நாட்டின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், தான் பதவியேற்றத்திலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மனதில் மேலும் வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறார். அந்த வரிசையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதமும் மரியாதையும் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஸ்டாலின், இந்து மதத்திற்கு எதிரானவர்’ என்று பாஜக தேர்தல் பரப்புரையின்போது விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில், சில வேத பண்டிதர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தாங்கள் கொண்டு வந்திருந்த பிரசாதத்தை வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டாலின் நடந்துகொண்ட விதம்,  இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற குற்றச்சாட்டை தகர்த்தியுள்ளது. மேலும் இந்நிகழ்வு மூலம், பொது மக்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றிருக்கிறார் ஸ்டாலின்.

அதுமட்டுமின்றி, ஸ்டாலின் வசிக்கும் பகுதியான ஆழ்வார்பேட்டையை குறிப்பிட்டு ஆழ்வார்பேட்டையை தேடி வந்த திருப்பதி என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஏற்கெனவே இந்து கோயில்கள் புனரமைப்பு பணிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வாக்குறுதி அளித்திருந்தார் ஸ்டாலின். விரைவில் இந்த திட்டத்தை தொடங்கி அதற்கான செயல்பாடுகளை தொடங்குவார் என்று பலர் நம்புகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை காசி, ராமேஸ்வரம், கேதர்நாத், உள்ளிட்ட இந்து ஆன்மிக தலங்களுக்கு செல்ல தலா ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tirupati devasthana vedic scholars met cm stalin blessed with prasad tamil news

Next Story
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை நிராகரித்த ஓபிஎஸ்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com