scorecardresearch

திருப்பதிக்கு மீண்டும் தினசரி ரயில்: தமிழக பக்தர்கள் நோட் பண்ணுங்க

திருப்பதி – காட்பாடி இடையே, வரும் 11ம் தேதி முதல், தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

திருப்பதிக்கு மீண்டும் தினசரி ரயில்: தமிழக பக்தர்கள் நோட் பண்ணுங்க

திருப்பதி – காட்பாடி இடையே, வரும் 11ம் தேதி முதல், தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, தினமும் காலை 10:55 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:30 மணிக்கு, வேலுார் மாவட்டம் காட்பாடி சென்றடையும். காட்பாடியில் இருந்து, இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:50 மணிக்கு திருப்பதி சென்றடையும்.விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் மயிலாடு துறைக்கு, வரும் 11ம் தேதி முதல், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரிகள் ஜூலை 1ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் தினசரி மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. அதேப்போல் அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இதையடுத்து 9 பெட்டிகளுடன் புறப்பட்ட விரைவு ரயிலில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tirupati katpadi jn daily unreserved express specials will be resumed with effect from 11th july