Advertisment

திருப்பதி ரயில்கள் ஏப்.16-23 வரை பகுதி ரத்து; தடங்களை செக் பண்ணுங்க

திருப்பதி ரயில்வே யார்டில் நடந்து வரும் பணிகள் காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னை, அரக்கோணம், விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
railway Train

வண்டி எண்கள் 16057, 16054, 16053 ஆகிய வண்டிகளும் பகுதி நேரமாக ஏப்.16-23ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Special Trains | Tirupati | திருப்பதி ரயில்வே யார்டில் நடந்து வரும் பணிகள் காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சென்னை, அரக்கோணம், விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகிறது.

Advertisment

இது குறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “வண்டி எண் 06727 ஏப்.16-23ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் வண்டி எண் அரக்கோணம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் திருச்சானூர் திருப்பதி இடையே ஏப்.16-23ஆம் தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 06728 திருப்பதி மோர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் திருச்சானூர் திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

தொடர்ந்து வண்டி எண்கள் 16057, 16054, 16053 ஆகிய வண்டிகளும் பகுதி நேரமாக ஏப்.16-23ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் வண்டி எண் 16058 திருப்பதி- சென்னை சென்டிரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16854 விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் காட்பாடி திருப்பதி இடையே பகுதி நேரமாக ஏப்.16-23ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், வண்டி எண் 16853 திருப்பதி விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஏப்.16-23ஆம் தேதிவரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tirupati Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment