Advertisment

எம்.ஜி.ஆர்-க்கு பதில் அரவிந்த் சாமி; கன்பியூஸ் ஆன ரத்தத்தின் ரத்தங்கள்?

எம்.ஜி.ஆர். பிறந்த தினமான இன்று ரத்தத்தின் ரத்தங்கள் நடிகர் அரவிந்த் சாமிக்கு கட் அவுட் வைத்த சம்பவம் நடந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tirupattur AIADMK printed a banner with Arvind Samys photo in response to the MGR film

அதிமிக நிறுவனத் தலைவர், மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் இன்று (புகைப்படம்: நன்றி தந்தி தொலைக்காட்சி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

tirupattur | mgr | அதிமுக கட்சியை நிறுவி, தமிழ்நாடு அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மறைந்த முதல் அமைச்சரான இவரின் 107வது பிறந்த நாள் இன்று (ஜன.17,2024) அதிமுக தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வைத்த பேனரில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிகர் அரவிந்த் சாமியிடம் படம் இடம் பெற்றிருந்தது.

Advertisment

சமீபத்தில் வெளியான தலைவி படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர். வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கழக ரத்தத்தின் ரத்தங்கள் எம்.ஜி.ஆர். படத்துக்கு பதிலாக அரவிந்த் சாமி படத்தை பயன்படுத்தி உள்ளனர்.

இது சமூக வலைதளத்தில் வைரலானது. தொடர்ந்து, சுதாரிக் கொண்ட ரத்தத்தின் ரத்தங்கள், உடனே அரவிந்த் சாமி படத்தின் மீது நடிகர் எம்.ஜி.ஆரின் மற்றொரு படத்தை ஒட்டியுள்ளனர். இந்தக் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mgr Tirupattur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment