dedicated beat system whatsapp group : வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பல்வேறு சமயங்களில் நம் அனைவரையும் ஒற்றுமையற்று வாழ வைத்துவிடுகிறது என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருப்பது உண்மை தான். ஆனால் அனைத்தையும் தாண்டி, தொழில்நுட்பத்தின் உதவியால் பல்வேறு நல்ல விசயங்களும் நடக்கத்தான் செய்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் காணமல் போன சிறுவனை வாட்ஸ்ஆப் குரூப் மூலம் தேடி கண்டுபிடித்துள்ளார் சிறுவனின் தந்தை.
#tnpoliceforu#Tiruppur City Police#followதிருப்பூர்மாநகரகாவல்
வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் #உயர்திரு_க_கார்த்திகேயன் (#IPS) உத்தரவின் பெயரில் இயங்கி வரும் #DEDICATED_BEAT_SYSTEM என்ற #22_BEAT வாட்ஸ்அப் pic.twitter.com/ZAazJw1YAg
— Tiruppur City Police (@Thirupurcitypol) July 27, 2020
திருப்பூரை சேர்ந்தவர் காஜா மைதீன். அவருடைய 4 வயது மகன் ஜாவித் அகமது நேற்று காலை தன்னுடைய வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரை யாரோ சிறிது நேரத்தில் கடத்தி செல்ல அதிர்ச்சியில் உறைந்தார் காஜா மைதீன். பல்வேறு இடங்களில் தேடிய அவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைத்து தன்னுடைய மகனின் படத்தை பகிர்ந்து, எங்கேனும் கண்டால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்.
திருப்பூர் காவல்துறையால் நடத்தப்படும் Dedicated Beat System வாட்ஸ்ஆப் குரூப்பிலும் தகவல்கள் பகிரப்பட்டது. இந்த செய்தி நேற்று மாலைக்குள் இந்த செய்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவியது. சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படம் பரவியதால், அச்சமடைந்த கடத்தல்காரர்கள் அந்த குழந்தையை திருப்பூர் மாவட்ட காவல் நிலையத்தின் அருகே குழந்தையை விட்டுச் சென்றுள்ளனர். இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் இந்த செய்தியை ஃபார்வர்ட் செய்ய வேண்டாம் என்று திருப்பூர் நகர காவல்துறை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசம்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil