திருப்பூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் திருப்பூர் மக்களவைத் தொகுதி 18-வது தொகுதி ஆகும். ஆண்டுக்கு சுமார் ரூ.40,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டும் டாலர் நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. இங்கு பின்னலாடை உற்பத்தி தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூர் மக்களவைத் தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.
பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளை கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின் திருப்பூர் மக்களவைத் தொகுதி 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 முறை அ.தி.மு.கவும் ஒருமுறை தி.மு.க கூட்டணி கட்சியும் வென்றுள்ளது. கடந்த முறை தேர்தலில் தி.மு.க கூட்டணி இங்கு வென்றது.
திருப்பூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,98,443. இதில் ஆண்கள் 7,86,475, பெண்கள் 8,11,718 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 250 பேர் உள்ளனர்.
2024 தேர்தல் வேட்பாளர்கள்
தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் சி.பி.ஐ-ன் கே.சுப்பராயன் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
அ.தி.மு.க சார்பில் அருணாச்சலம்
பா.ஜ.கவில் முருகானந்தம்
நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
மீண்டும் எம்.பியாகும் சுப்பராயன்
ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. டாலர் சிட்டி திருப்பூரில் இம்முறையும் சி.பி.ஐ-ன் மூத்த தலைவர் கே.சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.கவில் அருணாச்சலமும், பா.ஜகவில் முருகானந்தமும் இந்த தொகுதியில் போட்டியிட்டிருந்தனர். இங்கு அதிமுக-பா.ஜக நேரடி போட்டியிட்டது.
இந்நிலையில், சி.பி.ஐ-ன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நேற்று 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 5,56,198 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 2,28,692 வாக்குகள் பெற்றிருந்தார்.
அதிமுக வேட்பாளர் அருணாசலம் 1,71,386 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முருகானந்தம் 88,572 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 46,102 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சுப்பராயன் 57,306 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கே.சுப்பராயன் 4,72,739 ( 41%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3,46,811 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். மொத்தம் 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்பராயன் அமோக வெற்றி பெற்றார். 3-வது இடம் பிடித்த பா.ஜ.கவின் முருகானந்தம் 1,85,322 வாக்குகள் பெற்றார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
கடந்த முறை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.ஐ-ன் மூத்த தலைவர் கே.சுப்பராயன் 5,08,725 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆனந்தன் 4,15,357 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார் 64,657 வாக்குகளும், அ.ம.மு.கவில் போட்டியிட்ட செல்வம் 43,816 வாக்குகளும், நா.த.கவை சேர்ந்த ஜெகநாதன் 42,189 பெற்றனர். இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று சுப்பராயன் வெற்றி பெற்றார்.
2014 தேர்தல் முடிவுகள்
அ.தி.மு.கவின் சத்தியபாமா 4,42,778 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.கவின் செந்தில்நாதன் 2,05,411 வாக்குகளும், தே.மு.தி.கவின் தினேஷ்குமார் 2,63,463 வாக்குகளும். காங்கிரஸின் ஈ.வி,கே.எஸ் இளங்கோவன் 47,554 வாக்குகளும் பெற்றனர்.
2009 தேர்தல் முடிவுகள்
21 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் சிவசாமி 2,95,731 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸின் கார்வேந்தன் 2,10,385 வாக்குகளும், கொமுபே பாலசுப்பரமணியன் 95,299 வாக்குகளும், தேமுதிக தினேஷ் குமார் 86,933 வாக்குகளும் பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.