/tamil-ie/media/media_files/uploads/2020/07/Mobile-Marriage-hall.jpeg)
திருப்பூர் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் நடமாடும் திருமண மண்டபம்
Tiruppur Mobile marriage hall receives great response from people : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் பொதுவெளிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும், பொது நிகழ்வுகளில் மிகக் குறைவான அளவிலேயே மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது மத்திய அரசு.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல்வேறு திருமணங்கள் தற்போது நடைபெறாமலும், பல்வேறு இடங்களில் திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டும், சில இடங்களில் குறைவான விருந்தினர்களுடனும் திருமணங்கள் நடைபெறுகிறது. அளவான விருந்தினர்களுக்கு ஏன் அவ்வளவு பெரிய மண்டபம், எளிமையாக திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் பலரும் யோசனை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : ஆன்லைன் கிளாஸுக்கு அல்லாடுறீங்களா? பெஸ்ட் சாய்ஸ் சாம்சங் ‘டேப்’
திருமண மண்டபங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மக்களின் தேவைகளை உணர்ந்து காம்பேக்டாக மண்டபம் ஒன்றை உருவாக்கியுள்ளார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையை சேர்ந்த ஓவியர் அப்துல் ஹக்கீம். சிற்பி ஆர்ட்ஸ் என்ற பெயரில் மேடை அலங்காரம் செய்து வந்த அவர், திருமணங்கள் நடைபெறாத காரணத்தால் வேலையில்லா சூழ்நிலையில் வாடியுள்ளார். அப்போது தோன்றியது தான் இந்த நடமாடும் திருமண மண்டபம் என்ற ஐடியா.
தன்னிடம் இருந்த லாரியின் பின்பக்கத்தை அப்படியே மேடையாக மாற்றி, சோஃபா, தரை விரிப்புகள், மங்கல வாத்தியத்திற்கான ஸ்பீக்கர் செட்டப் மற்றும் ஏர்கூலர் என்று அனைத்தையும் அதில் சரியாக ஃபிக்ஸ் செய்திருக்கிறார்.
17 அடி நீளமுள்ள லாரியின் திருமண மேடைக்கு முன்னால் ரெட்கார்பெட் விரித்து ஒரு 50 இருக்கைகளை வைத்தால் மண்டபமே தான். யாருக்குத் தெரியும் வருங்காலத்தில் இப்படித்தான் மண்டபங்கள் செயல்படுமோ என்னவோ? ஆனாலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது பெரும் வகையில் உதவும் விதமாகவே இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.