/indian-express-tamil/media/media_files/Q4p2V9r5EgNgRH0akiP9.jpg)
கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18 ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வயிறு மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் வீரக்குமாரை மீட்டு கோவில் நிர்வாகத்திற்கும், வனத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் வீரகுமார், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடற் கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us