ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், “தொண்டர்கள் சோர்ந்து போய் இருப்பதாகவும், கட்சியை தி.மு.க.வில் இணைத்து விட இது சரியான தருணம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்தக் கடிதத்தில் கட்சி தொடங்கும்போது இருந்த உறுதி, வாரிசு அரசியல் எதிர்ப்பு தற்போது இல்லை எனவும் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, “மகனை ஆதரித்து அரவணைப்பதும் சந்தர்ப்பவாதம். இதனால், கழகத்தினர் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய திருப்பூர் துரைசாமி, “துரை வைகோ ஓர் சின்னப் பையன் என்றும் அவரிடம் பேச ஒன்றும் இல்லை எனவும் வைகோவிடம்தான் பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “துரை வைகோவை நான் மதிப்பதும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். அவரின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“