scorecardresearch

கட்சியை தி.மு.க உடன் இணைத்து விடுங்கள்: வைகோ-வுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம்

வைகோவிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால்.. மகனை ஆதரித்து அரவணைப்பது சந்தர்ப்பவாதம்.. என திருப்பூர் துரைசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tirupur Duraisamy request to merge MDMK with DMK
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோவுக்கு, திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதத்தில், “மகனை ஆதரித்து அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியல்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அந்தக் கடிதத்தில், “ம.தி.மு.க செயல்பாடுகள் உண்மையில் வருத்தம் அளிக்கின்றன.

வாரிசு அரசியலுக்கு எதிராக வைகோ பேசியபோது, லட்சக்கணக்கான தொண்டர்கள் அதில் உண்மை இருக்கும் என நம்பி வைகோவை ஆதரித்தனர்.
ஆனால் வைகோவின் குழப்பமான முடிவுகளால், ம.தி.மு.க.வில் இருந்து பிரிந்து மீண்டும் பலரும் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “வைகோவிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால் ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொண்டவர்கள், புதிதாக இணைந்தவர்களின் பெயர்களை சங்கொலியில் வெளியிட வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மகனை ஆதரித்து அரவணைப்பதும் சந்தர்ப்பவாதம். இதனால், கழகத்தினர் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
இதனை வைகோ இன்னமும் உணராமல் உள்ளது வருந்தத்தக்க வேதனையான நிகழ்வு. தொண்டர்கள் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tirupur duraisamy request to merge mdmk with dmk

Best of Express