பிரசவத்திற்கு சென்ற இஸ்லாமியப் பெண்ணை திருப்பி அனுப்பிய மருத்துவமனை: திருப்பூர் ஆட்சியரிடம் புகார்
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tirupur kangeyam, kangeyam muslim pregnant woman, private hospital avoid treatment to muslim pregnant woman, காங்கேயம், இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த காங்கேயம் தனியார் மருத்துவமனை , திருப்பூர் மாவட்டம், kaneyam, tirupur district collector action, tamil news, latest tamil news, latest tamil nadu news, kangeyam islamic pregnant woman issue story
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
Advertisment
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் பேகம். நிறைமாத கர்ப்பிணியான பேகம் பிரசவத்திற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், பரிசோதனைக்காக காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள் அவர் இஸ்லாமியர் என்பதை அறிந்து மருத்துவமனையின் உள்ளே விடாமல் மருத்துவர் இல்லை என்று கூறி சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்து அனுப்பிவிட்டனர் என்று புகார் எழுந்தது.
sir என் உடன்பிறவி தங்கைக்கு பிரசவலி வலி எற்பட்டு காங்கேயம் திவ்யா மருத்துவமனையில அனுமதிக்க முயன்ற போது இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என் சொல்கிறார்கள்
இதனை பேகமின் சகோதரர் தனது நண்பரிடம் கூற அவர் டி.ஆர் என்ற டுவிட்டர் பக்கத்தில், “என் உடன் பிறந்த தங்கைக்கு பிரசவ வலி ஏற்பட்டு காங்கேயேம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றபோது இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள்” என்று புகார் தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், தமிழக முதல்வர் அலுவலகத்தை டுவிட்டரில் டேக் செய்து பதிவிட்டார். மேலும், அவர், இந்த புகார் தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவையும் டுவிட்டரில் டேக் செய்திருந்தார்.
இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக புகார் எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த, மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உடனடியாக காங்கேயம் வட்டாட்சியரை தொடர்புகொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது குறித்து ஐ.இ தமிழ் கர்ப்பிணிப் பெண் பேகமின் சகோதரர் யூனிஸை தொடர்புகொண்டு பேசியபோது, காங்கேயம் பகுதியில் வசிக்கும் எனது சகோதரி பேகம் பிரசவத்திற்கு இன்னும் 10 நாள் உள்ளது. அதனால், அவரை காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே செவிலியர்கள் எங்களை மருத்துவமனையின் உள்ளேவிடாமல் வெளியே நிறுத்தி விசாரித்துவிட்டு, இப்போது இங்கே மருத்துவர் இல்லை. அதனால், நீங்கள் வேறு இடத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். பிறகு நாங்கள் வேறு மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தோம். அதன் பிறகு விசாரித்ததில், இங்கே 2-3 தனியார் மருத்துவமனைகளில் இஸ்லாமியர்கள் சிகிச்சைக்கு சென்றால் சில காரணங்களை சொல்லி சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் கூறினார்கள். அதன் பிறகு நான் என்னுடைய நண்பர் மூலமாக டுவிட்டரில் போஸ்ட் செய்திருந்தேன். அதற்கு பிறகு எல்லா அரசு அதிகாரிகளும் எனக்கு போன் செய்து என்ன நடந்தது என்பதைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்.
அதிகாரிகள் என்னிடம் கேட்டபோது, அவர்கள் சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. வதந்திகளை நம்பி சிகிச்சை அளிக்க பயந்து இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கிறார்கள். இது போல யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்று கூறினேன்.
அதற்குப் பிறகு அதிகாரிகள், அந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்கள். டாக்டரிடம் பேசினார்கள். எங்களையும் அந்த மருத்துவமனைக்கு மீண்டும் கூப்பிட்டார்கள். நாங்கள் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். இது எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினார். பின்னர், அந்த டாக்டர் செவிலியர்களை அழைத்து மீட்டிங் போட்டு எச்சரித்தார். அதன் பிறகு இதில் நாங்களே முழு பொறுப்பேற்றுக்கொள்கிறோம். நாங்களே பிரசவம் பார்க்கிறோம் என்று கூறினார். நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்”என்று யுனீஸ் கூறினார்.
மேலும், இந்த விஷயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டவுடன் மாவட்ட ஆட்சியர் உடனடியாக காங்கேயம் வட்டாட்சியர், தாராபுரம் சப் கலெக்டர் ஆகியோரை விசாரிக்க உத்தரவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தார் என்று யூனிஸ் கூறினார்.
I am Dr.Thivya. My parents Dr. Chidambaram and Dr. Mallika who run Dhivya hospital serve patients of multireligious background selflessly for the past 30 years. My mother Dr.Mallika has COPD( asthma) and she has been wheezing for two days. Pls dont spread fake news
இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவனை சிகிச்சை அளிக்க மறுத்தது தொடர்பான டுவிட்டர் புகாரில், திவ்யா என்ற டுவிட்டர் பயனர், தான் டாக்டர் திவ்யா என்றும் டாக்டர் சிதம்பரம் டாக்டர் மல்லிகாவின் மகள் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், தனது பெற்றோர் 30 வருடங்களாக பலதரப்பட்ட மக்களுக்கும் தன்னலம் கருதாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். தன்னுடைய அம்மா ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் 2 நாட்கள்க்கு சுவாசப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதனால், தவறான செய்தியை பரப்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"