திருப்பூ, வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழ்ந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூரைச் சேர்ந்த சந்திர சேகர்- சித்ரா தம்பதியினர், 60வது திருமண நாளை கொண்டாடுவதற்கு நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி வந்துக்ஜொண்டிருந்தபோது, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர்களது கார் மீது மோதியது.
இந்த காரில் பயணித்த 3 வயது குழந்தை உள்பட சந்திரசேகர் சித்ரா, இளவரசர் ஆகியோர் உயிரிழந்தனர். உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கார் மற்றும் பேருந்தை மீட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.