கையில் குடையுடன் ஒத்திக்கை: வைரலாகும் திருப்பூர் டாஸ்மாக் வீடியோ

Tirupur Tasmac: குடை பிடித்து வந்தால் தான் மது வாங்க முடியும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.

Tirupur Man trail Walk for tasmac
Tirupur Man trail Walk for tasmac

Tasmac Opening : சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் இன்று முதல் செயல்படும் என தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் அறிவித்திருந்தது. சமூக இடைவெளியை சரிவர கடைபிடிக்க வேண்டும் என்றும், அடையாள அட்டை ஒன்றை நபர்கள் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடை பிடித்து வந்தால் தான் மது வாங்க முடியும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று மது வாங்க வருபவர்கள், குடைபிடித்து வருவதற்கு ஏதுவாக, டாஸ்மாக் ஒன்றில் தடுப்புகள் அமைத்து ஆறடிக்கு ஒருவர் நிற்பது போல் கட்டைகள் கட்டி வட்டம் வரைந்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனிடையே, குடையை கையில் பிடித்தபடி எப்படி மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும் என்பதை குடையை வைத்துக் கொண்டு நபர் ஒருவர் ஒத்திகை பார்த்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tirupur man trail walk to buy alcohol in tasmac video

Next Story
ஊரடங்கு முடியும்வரை ஆன்லைனில் மது விற்கலாம்: புதிய உத்தரவுkanyakumari thuckalay police SI speaking viral video, thauckalay tasmac, kanyakumari thuckalay tasmac, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, தக்கலை டாஸ்மாக், தக்கலையில் டாஸ்மாக் முன்பு பேசிய போலீஸ் எஸ்.ஐ, வைரல் வீடியோ, thuckalay si speaking before tasmac, viral video, tamil video news, tamil viral vieo news, tamil tasmac video news, police SI speaking to another person, thuckalay tasmac wine shop viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com