திருப்பூரில் வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட், கேஎஸ்சி பள்ளி சாலை, அரிசி கடை வீதி, வெள்ளியங்காடு மற்றும் பழ குடோன் வீதி ஆகிய இடங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தபோது, 3 குடோன்களில், வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன 1.2 டன் அளவிலான மாம்பழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Credit: Sun News
உடனே அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“