/indian-express-tamil/media/media_files/eo61IrjlKkNDJ057Ggkv.jpg)
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், பொங்கல் பண்டிகையானது நாளை மறுநாள் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் பொங்கலிட்டு,பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை ஊக்குவித்து வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கியபோது. pic.twitter.com/VvbNrg084c
— Collector Tiruvallur (@TiruvallurCollr) January 12, 2024
— Collector Tiruvallur (@TiruvallurCollr) January 12, 2024
மேலும், விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடி மகிழ்தனர். அப்போது, மக்களின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எதிர்பாராத வகையில் குத்தாடம் போட்டு திரண்டிருந்த அனைவருக்கும் உற்சாகத்தை அளித்தார். இதன்பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இப்படியாக, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.
பொங்கல் கொண்டாட்டத்தில் மக்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஆட்சியர் பிரபு சங்கர்!#Tiruvallur#collector#dance#pongal#pongalfestival#mnadunewspic.twitter.com/UYT0LZbBzT
— M Nadu Tv (@mnadutv) January 13, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.