Advertisment

'பா.ஜ.க. கொள்கையை எதிர்க்க ஐ.ஏ.எஸ். பணியை துறந்தேன்': திருவள்ளூர் காங். எம்.பி. சசிகாந்த் செந்தில் சிறப்பு நேர்காணல்

செந்திலுக்கு அரசியலமைப்பின் மதிப்புகள் கற்பிக்கப்பட்டன, அதன் அம்சங்கள் அவரது தந்தையின் வாழ்க்கையையும் அவரது வாழ்க்கையையும் மேம்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Sasikanth Senthil

Tiruvallur Congress MP Sasikanth Senthil

தமிழ்நாட்டின் திருவள்ளூரில் இருந்து முதல் முறையாக காங்கிரஸ் எம்.பி.யான சசிகாந்த் செந்தில், அவரது தந்தை பி.சண்முகத்தின் சொந்த ஊரான மாத்தூரில் தீண்டாமைக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்.
செந்திலுக்கு அரசியலமைப்பின் மதிப்புகள் கற்பிக்கப்பட்டன, அதன் அம்சங்கள் அவரது தந்தையின் வாழ்க்கையையும் அவரது வாழ்க்கையையும் மேம்படுத்தியதாக அவர் கூறுகிறார். 
சாதிவெறியின் தாக்கத்தை எதிர்கொண்ட எனது தந்தை, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலித்துகளுக்கான சலுகைகளில் வளர்ந்தவர். அவர் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்தார், அரசு விடுதிகளில் தங்கி, நீதித்துறை அதிகாரி ஆவதற்கு படித்தார், என்று செந்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
எனவே, பாஜக அரசு 2019 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கியபோது, கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக இருந்த செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்து சமூக சேவையில் இறங்கினார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திருவள்ளூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், பாஜகவின் வி.பாலகணபதியை எதிர்த்து 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எவ்வாறாயினும், அவர் அரசியலுக்கு வந்ததற்குப் பின்னால் ஒரு தெளிவான பயணம் இருந்தது.
எனது தந்தை, தனது மகன்களில் ஒருவர் சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும், மற்றொருவர் நம் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்று கூறுவார். சமுதாயத்துக்கு நான், எங்கள் வீட்டுக்கு என் தம்பி.
எனது தந்தை கல்வி கற்கவும் பின்னர் வேலைக்காகவும் சென்னையில் குடிபெயர்ந்தார். அங்கு என் வீட்டில், சொந்த கிராமத்தில் எதிர்கொள்ளும் சாதிய பாகுபாட்டை பற்றி  அதிகமாக பேசிக் கொள்வோம். சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய புரிதலை இது எனக்கு அளித்தது.  
2002 ஆம் ஆண்டு பாஜக அரசாங்கத்தின் போது குஜராத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற கலவரங்களைக் கண்டபோது,  இளம் வயதிலேயே எனக்கு சமூக உணர்வு வந்தது. 
எனது 20 வயதில் நான் குஜராத்தில் உள்ள அரசியலை கவனிக்க ஆரம்பித்தேன், பாஜகவின் நிகழ்ச்சி நிரலை எதிர்க்க வேண்டும் என்பதை அறிந்தேன். ஆனால் அது எப்படி என்று நான் கண்டுபிடிக்கவில்லை. 
திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து முடித்தவுடன், ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் லாபகரமான வேலையில் சேர்ந்தேன். இருப்பினும், ஏதோ தவறாக இருந்தது. நான் இன்னும் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். அதனால், வேலையை விட்டுவிட்டு, ஒரு வருடம் தனியார் கல்லூரியில் பாடம் நடத்தினேன். 
இந்த நேரத்தில் தான் என்னைக் கண்டுபிடித்தேன். அரசு ஊழியராக வேண்டும் என்பதற்காக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தேன். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் ஒன்பதாவது ரேங்க் பெற்று 2009ல் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன். 
ஆனால் என் பயணம் அத்துடன் முடியவில்லை. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதன் இந்துத்துவா அரசியலில் எனக்கு சங்கடமாக இருந்தது. 2019-ல் மீண்டும் பாஜக அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது அதிர்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருந்தனர். ஆனால் நான் எனது வேலையை ராஜினாமா செய்தபோது, நான் ஏற்கனவே பாஜகவை எதிர்க்கும் வழியில் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், என்றார் செந்தில். 
அவர் ராஜினாமா செய்தபின் அவரது அரசியல் குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தாலும், 2020 டெல்லி கலவரம் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது.
பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். காங்கிரஸ் அலுவலகம் சென்று கட்சியில் சேர்ந்தேன், என்றார் செந்தில்…
அடுத்த நான்காண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் போது காங்கிரஸுக்காகப் பணியாற்றினார். 2024 லோக்சபா தேர்தலுக்கு கூட, காங்கிரஸ் வார் ரூமின் ஒரு பகுதியாக இருந்தார். 
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னையில் உள்ள கட்சியின் வார் ரூமில் பணியாற்றினார். 
அவரது பணியால் கட்சி ஈர்க்கப்பட்டதால், 2022 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மூன்று வார கர்நாடக பாரத் ஜோதா யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுக்கு இடையே தொடர்பு கொள்ளும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு, செந்தில் காங்கிரஸின் வார் ரூமுக்கு தலைமை தாங்கினார், மேலும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கு எதிரான கதையை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.    
இவற்றில் மிகவும் புதுமையானது "PayCM" பிரச்சாரம் ஆகும், இதில் முதல்வர் பொம்மையின் புகைப்படம் அடங்கிய QR குறியீடு போஸ்டர்கள் பெங்களூரு முழுவதும் பரவின.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது, அவர் மற்ற வேட்பாளர்களுக்காக பணியாற்றியதால், தனது சொந்த தொகுதியான திருவள்ளூரில் 19 நாட்கள் மட்டுமே செதில் பிரச்சாரம் செய்தார்.
அந்த 19 நாட்களில், முடிந்தவரை பலரைச் சென்று சந்தித்தேன். என் தொகுதியில் இருந்து அன்பும் பாசமும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார் செந்தில். 
செந்தில் தனது மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பேச இப்போது மக்களவை மேடையைப் பயன்படுத்துவார் என்று நம்புகிறார். 
நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் போது, தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெட்கக்கேடான கொடுமைகளை நிறுத்துங்கள், என்றார்.
’அன்று பேசியது ஆரம்பம் மட்டுமே.  மக்களவையில் தனது பதவிக் காலத்தில் எனது தொகுதியின் தேவைகளையும், எதிர்க்கட்சிகளின் பெரிய நிகழ்ச்சி நிரலையும் பேலன்ஸ் செய்வேன், என்று நம்புகிறேன். 
நான் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசும்போது, எனது தொகுதி மாணவர்களுக்காக மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருந்து மருத்துவர்களாக ஆசைப்படும் கோடிக்கணக்கான மாணவர்களுக்காகவும் பேசுகிறேன், என்கிறார் செந்தில்…
Read in English: Sasikanth Senthil’s long road from Tiruvallur, and from stories of untouchability and why Constitution matters
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment