/indian-express-tamil/media/media_files/SJREkXcAscURCY6ijBmi.jpg)
Tiruvallur
திமுக கூட்டத்தில் மின்விசிறியில் கைப்பட்டதால்- விரல் துண்டான மாவட்ட செயலாளரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரனின் கை தவறுதலாக மின் விசிறியில் பட்டதால், அவரது சுண்டு விரல் துண்டானது.
சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கான பணிகளின் போது எதிர்பாராத விதமாக காயமுற்ற திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் @ChandranDMK_ அவர்களை திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தோம்.
— Udhay (@Udhaystalin) November 5, 2023
இந்த சந்திப்பின் போது கழகத்… pic.twitter.com/8AK8pXQcxP
இதையடுத்து அவர் திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையறிந்த உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரனிடம் நலம் விசாரித்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், சந்திரனிடம் தொலைபேசியில் பேசி விரைவில் நலம் பெற வேண்டி, ஆறுதல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.