திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, சந்தேக நபர் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 9952060948 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி ஜூலை 12-ம் தேதி மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது. திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி விடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, சந்தேக நபர் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள சந்தேக நபர் ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஆவார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9952060948 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்” என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 9952060948 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.