தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு லட்சம் பிரசவத்தில் 39.4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதுவே திருவள்ளூர் மாவட்டத்தில் எடுத்துக் கொண்டால் 26 ஆக இருக்கிறது. சிசு இறப்பு மாநில அளவில் 1,000 பிறப்புகளில் 7.7ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5.7ஆகவும் பதிவாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவள்ளூர் அய்யப்பாக்கத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். திருவள்ளூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு ரோல் மாடலாக உள்ளது.
2021-22 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்று நோயின் போது, மாநிலத்தில் மகப்பேறு மரணம் தமிழ்நாட்டில் 1 லட்சம் பிறப்புகளில் 90.5 ஆக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டில் 73 ஆக இருந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின் தமிழக அரசு புதிய செயல் திட்டங்கள், வழிகாட்டுதல்கள் மூலம் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. தொடர்ச்சியாக செயல்பாடுகளுக்கு தற்போது பலன் கிடைத்து வருகிறது.
மகப்பேறு இறப்பு 2022-23ல் ஒரு லட்சம் பிறப்புகளில் 52 ஆகவும், 2023-24ல் 45.5 ஆகவும் குறைந்துள்ளது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“