ஆந்திர மாநில எல்லையான தடா அருகே உள்ள ஒரு இடத்தில் இருந்து தமிழகத்திற்கு மூன்று வாகனங்களில் கடத்தல் பொருள்கள் ஏற்றப்பட்டு வந்துள்ளன. இந்த கடத்தல் தொடர்பாக திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
அப்போது, கும்முடிப்பூண்டி அருகே இரு வாகனங்களை மறித்த திருவள்ளூர் தனிப்படை போலீசார் வாகனங்களை சோதனையிட்டதில், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,800 கிலோ குட்காவை கண்டுபிடித்துள்ளனர். மூன்றாவது வாகனத்தில் பல மருந்துப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மருந்துப் பரிசோதகர் ஆவணங்களைச் சரிபார்த்து, மருந்துகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பிறகு, மூன்றாவது வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குட்கா கடத்த பயன்படுத்திய இரண்டு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏஜென்சி மூலம் டெல்லியின் நொய்டாவில் இருந்து குட்கா வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆய்வாளர்கள் அந்த வளாகத்தில் சோதனை நடத்தி சீல் வைத்தனர். டெல்லியில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்டுள்ளது. பின்னர் ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு கடத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் ஆதாரம், போக்குவரத்து மற்றும் விற்பனை நெட்ஒர்க் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“