திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலும் ஒன்று. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுணர்மி தினத்தில் கிரிவலம் சுற்ற ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இந்த தினங்களில் சில மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா நாளில், திருவண்ணாமலை மலையில் தீபம் ஏற்றப்படும் 3 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தினத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அந்த வகையில், 2024-ம் ஆண்டு தீப திருவிழா வரும் டிசம்பர் 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
தீப திருவிழாவை முன்னிட்டு, காலையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும் நிலையில், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரம் உள்ள மலை மீது தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வை காரண பலாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு திரண்டு வருவார்கள். அநத வகையில் இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 8 (நாளை) முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை, 156 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil