திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி திருவண்னாமலை நகரப் பகுதிக்கு அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்களுக்கு மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் டிம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இந்நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகே உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“