/tamil-ie/media/media_files/uploads/2022/09/try.jpg)
திருச்சி காவிரி பாலம் ரூ.6 கோடியே 87 லட்சம் மதிப்பிட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பாலத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தற்காலிகமாக காவிரி பாலம் மூடப்பட்டது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனால் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள், இன்னும் பிற வாகனங்கள் சில கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-12-at-6.14.01-PM.jpeg)
அதன்படி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை கும்பகோணம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் செல்லுமாறும், அதே வழியில் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனை ஈடு செய்வதற்காக தனியார் மற்றும் அரசு பேருந்தில் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை உயர்த்தி பயணிகளிடம் இருந்து இன்று முதல் வசூல் செய்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-12-at-6.14.00-PM.jpeg)
ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல 7 ரூபாய் இருந்த நிலையில், இன்று முதல் 9 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதேபோல், மத்திய பேருந்து நிலையத்திற்கு பத்து ரூபாய் இருந்த நிலையில், 11 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல் சமயபுரம் மண்ணச்சநல்லூர் லால்குடி, அன்பில் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரக் கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் கூடுதல் கட்டணமானது வசூல் செய்யப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-12-at-6.14.01-PM-1.jpeg)
அரசு பேருந்துகள் உட்பட தனியார் பேருந்துகளிலும் முன்னறிவிப்பின்றி கட்டண உயர்வு இன்று முதல் அமலானதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் குறைந்த அளவே காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-12-at-6.14.01-PM-2.jpeg)
ஆனால் இன்று வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால், இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி காவிரி பாலத்தை கடக்க முயன்றபோது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கும் மற்றும் பேருந்து கட்டண உயர்வுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.