தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் செல்போன்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 9.30 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவில் எந்தெந்த மாவட்டங்கள் ‘டாப்’? அன்பில் மகேஷ் பேட்டி
10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ‘செக்’ செய்வது எப்படி?
தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் ஒரே நாளில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் இன்று வெளியாகும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
10, 12ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்களை காவல்துறை சார்பாக வாழ்த்திய சைலேந்திர பாபு தோல்வியடைந்த மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைத்தேர்வு எழுது வெற்றிபெறலாம் என்று தெரிவித்தார். மேலும் தோல்வியடைந்த மாணவர்கள் எதிர்காலத்தில் அரசு துறையில் பணியாற்றலாம், நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகலாம் , இதனால் மனம் தளர வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் மகளிர் காவல்நிலையத்தை அணுகி மனநல ஆலோசனை பெற முடியும் என்றும் தெரிவித்தார் .
பிளஸ் 2 தேர்வு எழுதிய சிறை கைதிகள் 74 பேரில் 71 பேர் தேர்ச்சி பெற்றனர். 10ம்- வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் 242 பேரில் 133 பேர் தேர்ச்சி பெற்றனர்.
http://www.tnresults.nic.in/arcxrs.htm என்ற இணையதளம் மூலமாக 10ம் வகுப்பு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் 100% தேர்ச்சி நோக்கி இனிவரும் காலங்களில் செயல்படுவோம்; ஜூலை முதல் 5 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
12ம் வகுப்பில் கணிதத்தில் 1,858 மாணவர்கள் சதம் . வணிகவியலில் 4,634 மாணவர்கள் சதம் .கணக்குப் பதிவியல் -4,540 , கணினி அறிவியல் 3,827, கணினிப் பயன்பாடுகள் – 2,818 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.25% அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சியடைந்துள்ளனர். 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8.06 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 24 ம் தேதி முதல் பெறலாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
12ம் வகுப்பில் 93.76 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
10ம் வகுப்பில் 90.07 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 9.30 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 10 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.