தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதில் தமிழக அரசின் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் 155 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 12 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதினார்கள்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பிளஸ் டூ தேர்வு முடிவுகளை, புதுச்சேரி அரசு கல்வித்துறை இன்று வெளியிட்டது.
இந்தாண்டு பிளஸ்டூ தேர்வில் 92.41% பேர், அதாவது 12,948 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 155 பள்ளிகளில், குளுனி மேனிலைப்பள்ளியில் வணிகவியல் பிரிவு படித்த மாணவி ஸ்ரேயா 597 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
முழு நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.படிப்புக்கும் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என மாணவி ஸ்ரேயா தெரிவித்தார்
புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் 2023- 2024 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை.
பள்ளியில் A1,A3 பிரிவுகளை சேர்த்து மொத்தம் 78 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 78 மனைவிகளும் தேர்ச்சி பெற்றனர். முதல் மாணவியாக நித்யா 552 மதிப்பெண்களும், இரண்டாவதாக மாணவி பிரித்தி 523 மதிப்பெண்களும், மூன்றாவதாக ஹேமா ஸ்ரீ மாணவி 517 மதிப்பெண்களும் பெற்றனர்.
மாணவி ஹேமா ஸ்ரீ கணினி அறிவியல் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பள்ளி துணை முதல்வர் சிவகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் வசந்தி ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இரண்டாவது முறையாக இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“