வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சர்ச்சைப் பேச்சு . இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மக்கள் இனப்படுகொலைகளுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தான் காரணம் என்று கூறி நேற்று தமிழக மாவட்டங்கள் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Advertisment
ஒவ்வொரு மாவட்டங்களின் தலைநகரிலும் நடந்த பொதுக்கூட்டங்களை அமைச்சர்கள் தலைமையேற்று பேசினார்கள். சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
தஞ்சையில் பேசிய துரைக்கண்ணு
தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் டெல்டா பகுதியில் அதிமுக அரசு செய்த சாதனைகளைப் பற்றி பேசினார். 2247 கோடி ரூபாயை வறட்சி நிவாரண நிதியாக கொடுத்ததும் அதிமுக ஆட்சி என்று அவர் குறிப்பிட்டார்.
நாக்கை அறுத்துவிடுவோம் என்று பேசிய துரைக்கண்ணு
மேலும் பேசிய அவர் “யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம்” என்று அவர் கூறினார். பொதுக்கூட்டத்தில் சர்ச்சையை எழுப்பும் வகையில் பேசியது அங்கு கூடிய அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.