Chennai News Live Updates: அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மசோதா - ஸ்டாலின் ஆலோசனை

Tamil Nadu Latest Live News Update in Tamil 14 October 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 14 October 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM MK Stalin

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்: கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சுமுக முடிவு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

  • Oct 14, 2025 20:27 IST

    அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மசோதா - ஸ்டாலின் ஆலோசனை

    அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா, நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.10.2025) அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் எம்.பி.எம்.என்.ஆர். இளங்கோ மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • Oct 14, 2025 20:21 IST

    ஃபாக்ஸ்கான் முதலீடு குறித்து அன்புமணி இராமதாஸுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில்

    உலகளாவிய மின்னணுவியல் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்வது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலளித்துள்ளார்.

    சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்வது உறுதியான, எந்தவித தவறும் இல்லாத உண்மை செய்தி," என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    மேலும் அவர், "ஓராண்டு போராட்டத்திற்குப் பிறகு வேலைவாய்ப்புகள் உறுதியாகியிருக்கும் நிலையில், நடப்பு வர்த்தகச் சூழல் தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் சிலர் நடப்பவர்களுக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கூறிப் புலம்புகின்றனர். வேலைவாய்ப்பு உறுதியாகி நல்லது நடக்கும்போது காழ்ப்புணர்ச்சி கொள்கின்றனர்," என்றும் விமர்சித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 14, 2025 20:00 IST

    தீபாவளி சிறப்பு: ஆம்னி பேருந்துக் கட்டணம் குறைப்பு; பயணிகளுக்கு ஆறுதல்

    தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணங்கள், பொதுமக்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் புகார்களுக்குப் பிறகு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் அதிகபட்சமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள், தற்போது பயணிகள் நலன் கருதி குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முக்கிய வழித்தடங்களில் குறைக்கப்பட்ட கட்டண விவரங்கள்:

    சென்னை - மதுரை: முன்னர் ரூ. 4,000 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது ரூ. 2,600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை - திருநெல்வேலி (நெல்லை): ரூ. 5,000 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ. 3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தீபாவளிக்குப் பயணிக்கத் திட்டமிடும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இது பெரும் ஆறுதலை அளித்துள்ளது.



  • Oct 14, 2025 19:15 IST

    பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை 6-7, இரவு 7-8 மணி வரை தமிழக அரசு அனுமதி

    “தீபாவளி அன்று காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



  • Oct 14, 2025 18:37 IST

    இசைஞானி இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.



  • Oct 14, 2025 18:36 IST

    மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 259 ரன்கள் இலக்கு

    மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 15வது லீக் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்ன மற்றும் சாமரி அத்தபத்து களம் கண்டனர். இதில் விஷ்மி குணரத்ன 42 ரன்னிலும், சாமரி அத்தபத்து 53 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஹாசினி பெரேரா மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஹர்ஷிதா சமரவிக்ரம 26 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 50 ஒவரில் 6 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 55 ரன் எடுத்தார். தொடர்ந்து 259 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.



  • Oct 14, 2025 18:28 IST

    ”தமிழ்நாட்டில் புரட்சியை ஏற்படுத்திய முதல்வர் கோப்பை போட்டி”

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது; பயிற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் விளையாட்டில் வெல்ல முடியும். கலைஞரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.



  • Oct 14, 2025 18:26 IST

    ”விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம்”

    தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் விளையாட்டுத்துறையிலும் எதிரொலிக்கிறது. தீறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என சென்னையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.



  • Oct 14, 2025 18:26 IST

    திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? - அண்ணாமலை

    அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். உங்க கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா? ஏற்கனவே திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தியதை, நாங்கள் கண்டித்த உடன், இனி இப்படி நடைபெறாது என்று உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் இவற்றை எதையும் கண்டுகொள்ளாமல், வெளிநாட்டுச் சுற்றுலாவில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே முகாம்களில் பெற்ற மனுக்களை, வைகையாற்றில் மிதக்க விட்டுவிட்டு, எதற்கு இந்த வெட்டி விளம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 14, 2025 18:18 IST

    தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி  முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 14, 2025 17:56 IST

    ”இந்திய தயாரிப்பு 3 இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள்”

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த மருந்துகள் ஏதேனும் நாடுகளில் கண்டறியப்பட்டால் உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது என்றும் பொதுவாக ஐந்து வயதுக்குள்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.

     



  • Oct 14, 2025 17:37 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறையில் இருந்த 3 பேருக்கு ஜாமீன்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 3 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதை சுட்டிகாட்டி சதீஷ், சிவா, ஹரிஹரன் ஆகிய 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரன் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கும் முன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



  • Oct 14, 2025 17:02 IST

    மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் சமர்ப்பிப்பு

    மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்ட குழுவானது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நலத் திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல் மற்றும் அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்ட குழு நல்கி வருகிறது.



  • Oct 14, 2025 17:02 IST

    பீகார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பா.ஜ.க

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 6, 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் 121 தொகுதிகளில் 17-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. எனவே, அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு வேகம் எடுத்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று கடந்த 12-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பீகார் சட்டசபை தேர்தலுக்கு 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்-மந்திரி விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 14, 2025 16:51 IST

    அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின்

    மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் முடிந்து நேற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து காரியம் மற்றும் பிற நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டி ஜாமின் கோரி மனு அளித்திருந்தார்.



  • Oct 14, 2025 16:17 IST

    பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

    "தமிழ்நாட்டின் மாம்பழ விவசாயிகள் நலன் கருதியும் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்"

    2025 ஆம் ஆண்டில் மாம்பழம் பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிப்பு; மா விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்



  • Oct 14, 2025 16:15 IST

    ரோட் ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறை: தலைமை நீதிபதி உத்தரவு 

    அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில்  
    2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்

    - தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, பூர்ணிமா அமர்வு உத்தரவு 



  • Oct 14, 2025 16:11 IST

    தோனிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

    கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு.

    ஐபிஎல் சூதாட்டம் குறித்து டி.வி விவாதத்தில் அவதூறு கருத்து கூறியதாக, தோனி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.



  • Oct 14, 2025 16:10 IST

    சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவு

    சென்னை ராயப்பேட்டைக்கும் ஆர்.கே. சாலைக்கும் இடையில் 910 மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆர்.கே. சாலை நிலையத்தில் இருந்து சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'பவானி' வெளியே வந்தபோது, மெட்ரோ ரயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அதை வரவேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.

    வீடியோ: சன் நியூஸ்



  • Oct 14, 2025 16:09 IST

    ஸ்ரீ-க்கு அக்.28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை அக்.28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Oct 14, 2025 16:07 IST

    அமலாக்கத்துறையின் செயல்பாடு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி

    கடந்த 6 ஆண்டுகளாக அமலாக்கத்துறை யின் பல வழக்குகளை கவனித்து வருகிறேன். ஆனால், அவை குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏதாவது பேசினால் அது ஊடகங்களில் மீண்டும் செய்தியாகும்.

    -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

    முன்னதாக டாஸ்மாக் வழக்கை விசாரித்தபோது, அனைத்து வரம்புகளையும் இ.டி. மீறுவதாகவும், கூட்டாட்சித் தத்துவத்தை மீறி செயல்படுவதாகவும் தலைமை நீதிபதி கவாய் கூறியிருந்தார்



  • Oct 14, 2025 15:29 IST

    நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை?

    கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திப்பது தொடர்பாக, சென்னை பட்டிணப்பாக்கம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.



  • Oct 14, 2025 15:25 IST

    யூடியூப் வருமானத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசாதீர்கள்

    23 வயதான இளைஞரை டார்கெட் செய்ய நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒன்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரோ, முன்னாள் சேர்மேனோ இல்லை. 

    ஹர்ஷித் ராணா அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து தன் யூடியூப் பக்கத்தில் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியதைக் கண்டித்து கம்பீர் விமர்சனம்



  • Oct 14, 2025 14:58 IST

    பீகார் சட்டசபை தேர்தல் - 2ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த பிரஷாந்த் கிஷோர்

    பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2-வது கட்டமாக 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஜன் சுராஜ். 243 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே 51 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர்.



  • Oct 14, 2025 14:31 IST

    அயோத்தியில் அதிர்ச்சி

    அயோத்தி ராமர் கோயில் பாதையை ஆக்கிரமித்ததாக கூறி சாலையோர வியாபாரிகளை தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவரில் தலைகீழாக நிற்க வைத்து மாநகராட்சி ஊழியர்கள் கொடுத்த தண்டனையால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



  • Oct 14, 2025 14:29 IST

    `டாஸ்மாக் ரெய்டு - மாநில உரிமைகளை பறிப்பதில்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி

    டாஸ்மாக் அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது மாநில உரிமைகளை பறிப்பதில்லையா?  கூட்டாட்சி முறை என்னாவது?  சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது யார்? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளர்.



  • Oct 14, 2025 13:59 IST

    இ.டி அரசு நிறுவனங்களில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்லலாமா? தலைமை நீதிபதி கேள்வி

    மாநில அரசின் விசாரணையில் சந்தேகம் இருந்தால் இ.டி தன்னிச்சையாக அரசு நிறுவனங்களில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்லலாமா? என்னை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? மாநில அரசின் விசாரணையில் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.



  • Oct 14, 2025 13:55 IST

    முடிவுக்கு வந்த டேங்கர் லாரிகள் சங்கம் ஸ்டிரைக் -உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    எல்.பி.ஜி (LPG) கேஸ் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததை டேங்கர் லாரிகள் சங்கம் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்.



  • Oct 14, 2025 13:17 IST

    எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.



  • Oct 14, 2025 13:16 IST

    சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுப்பது மாநில அரசின் விசாரணை உரிமையை பறிப்பது ஆகாதா?. சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா?. சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?. அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுப்பது மாநில அரசின் விசாரணை உரிமையை பறிப்பது ஆகாதா? என்று டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.



  • Oct 14, 2025 12:47 IST

    23 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மருந்து நிறுவனம் அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

    23 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மருந்து நிறுவனம், அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருந்து நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துவர்கள் ஆய்வு செய்து தோயாளிகளுக்கு தர வேண்டும். தமிழ்நாடு மருந்தியல் துறை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.



  • Oct 14, 2025 12:44 IST

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கல்வி, மருத்துவத்துக்கு உதவுவதாக ஆய்வில் பெண்கள் தகவல்

    தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கல்வி, மருத்துவத்துக்கு உதவுவதாக ஆய்வில் பெண்கள் தகவல் வெளியாகியுள்ளது. தரமான உணவுப்பொருட்கள் வாங்க மகளிர் உரிமைத் தொகையை சிலர் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரை மகளிர் உரிமைத் தொகை சென்று சேர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.



  • Oct 14, 2025 12:44 IST

    புதுச்சேரியில் நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

    புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியில் நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என திருக்கனூர், கூனிச்சம்பட்டு, தேத்தம்பாக்கம் பகுதி நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 14, 2025 12:38 IST

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதம்

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும். உச்சிப்புளி அருகே மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. துண்டிக்கப்பட்ட மின் வயர்கள் சரிசெய்த பின், 3 மணி நேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் சென்றது.



  • Oct 14, 2025 12:12 IST

    சாதியை வளர்ப்பதற்காக இருக்காது - திருமாவளவன்

    ஜி.டி. என்று மட்டுமே பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் அது மகிழ்ச்சி. ஜி.டி.நாயுடு என்ற பெயரில்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதால், அது சாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 



  • Oct 14, 2025 12:04 IST

    தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், நெல்லை, நாகை மற்றும் திருவாரூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 14, 2025 11:46 IST

    வருங்கால வைப்பு நிதி - பணம் எடுக்க புதிய முடிவு

    வருங்கால வைப்பு நிதியில் 100 % வரை பணம் எடுக்க அனுமதியளித்து மத்திய அமைச்சர் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு கல்விக்கு 10 மடங்கும், திருமணத்திற்கு 5 மடங்கும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



  • Oct 14, 2025 11:06 IST

    எகிப்தில் நடந்த காசா அமைதி ஒப்பந்தம் - மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப்

    நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என எகிப்தில் இத்தாலி பிரதமர் மெலோனிடம் மனம் திறந்து அமெரிக்க அதிபர் டிரம் பேசியுள்ளார்.



  • Oct 14, 2025 10:36 IST

    எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை - ஆறாவது நாளாக வேலை நிறுத்தம்

    1500 லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல எல்.ஜி.பி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஆறு நாட்களாக தொடரப்படும் இந்த வேலை நிறுத்தத்தால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



  • Oct 14, 2025 10:08 IST

    கரூர் உயிரிழப்பு - சட்டப்பேரவையில் இரங்கல்

    கரூரில் த.வெ.க பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.



  • Oct 14, 2025 09:47 IST

    பா.ம.க எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா

    சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ம.க சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. 



  • Oct 14, 2025 09:42 IST

    சபாநாயகரை சந்தித்த அன்புமணி தரப்பு

    பாமக அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்க கோரி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் சந்தித்துள்ளனர்.



  • Oct 14, 2025 09:41 IST

    அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் போக்சோ வழக்கில் கைது!

    அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஷ்ரீ போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.



  • Oct 14, 2025 09:38 IST

    சட்டசபை கூடியது

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது . மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்து வருகிறார்.



  • Oct 14, 2025 09:30 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.95ஆயிரத்தை நெருங்கியது

    தங்கம் சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 கூடியுள்ளது. ஒரு கிராம் ரூ.11,825க்கும் ஒரு சவரன் ரூ.94,600க்கும் விற்பனையாகிறது.



  • Oct 14, 2025 09:00 IST

    நயன்தாரா ஆவணப்பட காப்புரிமை - இன்று விசாரணை

    நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்துகிறது.



  • Oct 14, 2025 08:45 IST

    என்.டி.ஏ கூட்டணியில் இழுபறி

    பீகாரில் தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறியாக உள்ளது. இன்று பாஜக கூட்டணி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 14, 2025 08:43 IST

    எல்பிஜி டேங்கர் லாரிகள் 6வது நாளாக வேலைநிறுத்தம்

    நாமக்கலில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டரால் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய டெண்டரில் காலாவதியான ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  



  • Oct 14, 2025 08:34 IST

    இந்தியாவில் நேரடி வரி வசூல் 6.33% அதிகரிப்பு!

    இந்தியாவின் நிகர நேரடி வரி வருவாய் அக்டோபர் 12 ஆம் தேதி நிலவரப்படி நடப்பு நிதியாண்டில் 6.33% அதிகரித்து ரூ.11.89 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. கடந்த நிதியாண்டை விட கார்ப்பரேட் நிறுவன வரிகள் ரூ.4.91 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.02 லட்சம் கோடியாகவும் தனிநபர்கள் உள்ளிட்ட பிற வரிகள் ரூ.5.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.56 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.  



  • Oct 14, 2025 08:31 IST

    தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4100 அமெரிக்க டாலர்களைக் கடந்தது

    தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4100 அமெரிக்க டாலர்களைக் கடந்தது.



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: