/indian-express-tamil/media/media_files/jl4PUd6wO2On3Z2TaY70.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப்-க்கு பதிலாக அரட்டை – உச்சநீதிமன்றம் பரிந்துரை
தனது வாட்ஸ்அப் கணக்கு முடக்கம் அடிப்படை உரிமை மீறல், இத்தடையை நீக்குமாறு உத்தரவிட கோரி பெண் மருத்துவர் தாக்கல் செய்த வாட்ஸ்அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வாட்ஸ்அப் பயன்பாடு அடிப்படை உரிமை இல்லை. உள்நாட்டு தயாரிப்பாளா சோஹோ (ZOHO)-வின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள் என்று, குறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது,
- Oct 16, 2025 07:06 IST
நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெறலாம் - அமைச்சர் சக்கரபாணி
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். நவம்பவர் மாத அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பரில் பெற்றுக்கொள்ளலாம் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
- Oct 15, 2025 21:57 IST
இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு அனுமதி - உச்ச நீதிமன்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விரைவில் நீதி வழங்கக் கோரியும் குற்றம்சாட்டப்பட்டவர்கலை ஜாமினில் விடுவிக்க தடை விதிக்க பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கோரிக்கை வைத்துள்ளார்.
- Oct 15, 2025 21:21 IST
‘இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் இ.பி.எஸ்’ - அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி: “கரூர் துயரத்தில் இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. 41 பேரின் இறப்பில் கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல் வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் மயான அரசியல் எடுபடாது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
- Oct 15, 2025 20:42 IST
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: ரூ.175.51 கோடி வரவு - அமைச்சர் சிவசங்கர்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1.05 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, போனஸ் மற்றும் கருணைத் தொகையாக மொத்தம் ரூ.175.51 கோடி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று (அக். 15) வரவு வைக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
- Oct 15, 2025 20:37 IST
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் சி.பி.ஐ விசாரணை; மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அதிருப்தி
பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மத்திய அரசு மற்றும் அதன் விசாரணை அமைப்புகள் தொடர்பான முறைகேடுகளில் நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்பு விசாரணைக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் கையாள்வது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “மத்திய அரசு மற்றும் அதன் விசாரணை அமைப்புகள் தொடர்புடைய முறைகேடுகளில் நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்பு விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தை நாடும்போதெல்லாம் அந்தக் கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தால் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டால் போதும், அதற்கு மாற்றாக சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
- Oct 15, 2025 20:08 IST
தமிழ்நாட்டில் ஹிட்டாச்சி நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் ஹிட்டாச்சி நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அப்பொது ஹிட்டாச்சி நிறுவனத்தி உயர் மட்ட அதிகாரிகள், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உடன் இருந்தனர்.
- Oct 15, 2025 19:48 IST
மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா
மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா செய்துள்ளார்.
- Oct 15, 2025 19:22 IST
ரேஷன் கடைகளில் நவம்பர் மாத அரிசியை இந்த மாதமே பெறலாம் - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “வழகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் நவம்பர் மாத அரிசியை இந்த மாதமே (அக்டோபர்) பெறலாம். முன்கூட்டியே அரிசி பெறாதவர்கள் வழக்கம்போல வாங்கலாம்” என்று கூறினார்.
- Oct 15, 2025 18:40 IST
தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க தலா ரூ.1000 வசூலியுங்கள் – ஐகோர்ட் அறிவுறுத்தல்
சாலை ஓரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருவோரிடம் ஒரு கொடி கம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வசூலியுங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
- Oct 15, 2025 18:27 IST
ஆதவ் அர்ஜுனா போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தலைவராக ஐசரி கணேஷ், பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
- Oct 15, 2025 18:12 IST
ஹிஜாப் விவகாரம்; அனுமதிக்க கல்வி அமைச்சர் உத்தரவு
கேரளா, கொச்சியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்
- Oct 15, 2025 17:53 IST
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாக்., மேலும் கடன் வழங்கும் ஐ.எம்.எஃப்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி, பாகிஸ்தானுக்கு மேலும் ரூ.10,600 கோடி ரூபாய் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 15, 2025 17:39 IST
அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பசுபலெட்டி பாலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 80 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Oct 15, 2025 17:38 IST
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா நாளை இந்தியா வருகை
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக நாளை(16-ந்தேதி) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இலங்கையின் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா, இங்கு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நலன்கள் சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
- Oct 15, 2025 17:15 IST
சென்னை: வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர் தூதரகங்களில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் அது புரளி என தெரிய வந்திருக்கிறது. தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலி வெடிகுண்டு மிரட்டல்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- Oct 15, 2025 17:14 IST
த.வெ.க மாவட்டச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கரூரில் த.வெ.க பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு செய்ததாக சேலம் கிழக்கு தவெக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வெங்கடேசனை 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- Oct 15, 2025 17:13 IST
புழல் ஏரி உபரி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கால்வாய் ஓரம் வசிப்பவர்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர் வரத்து உள்ளது.3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரி 90% மேல் நிரம்பியதை அடுத்து பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.
- Oct 15, 2025 17:12 IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 15, 2025 17:11 IST
பீகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதிஷ் குமார்
பீகார் தேர்தலில் 57 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 44 வேட்பாளர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என் ஜே.டி.யு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 15, 2025 16:50 IST
மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடர்ல் கடந்த 12ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்ஹ்ட மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் வீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Oct 15, 2025 16:50 IST
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மசோதாக்களை கவர்னர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது. கவர்னரின் நடவடிக்கை தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 15, 2025 15:53 IST
லைகா வழக்கில் விஷால் பணத்தை திரும்பச் செலுத்த ஆணை
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்தக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
- Oct 15, 2025 15:52 IST
ரிதன்யாவை குற்றம்சாட்டி கவின்குமார் வழக்கு -ஐகோர்ட் உத்தரவு
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரண விவகாரத்தில், கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணத்தில் விருப்பம் இல்லை என ரிதன்யா அவரின் தோழிகளிடம் பேசியது செல்போனில் உள்ளன என்று கணவர் கவின்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- Oct 15, 2025 15:32 IST
காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவல் நீட்டிப்பு
காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- Oct 15, 2025 15:30 IST
நீலகிரியில் ’ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல்’ பாதிப்பு உறுதி
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த மாதம் உயிரிழந்த 6 காட்டுப் பன்றிகளில் 2 பன்றிக்கு ’ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல்’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனைகட்டி பகுதியில் உயிரிழந்த 7 பன்றிகளின் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்காய்ச்சல் மனிதர்களுக்கோ, பிற விலங்குகளுக்கோ பரவக் கூடியது அல்ல என்பதால் அச்சம் தேவையில்லை என வனத்துறை விளக்கமளித்துள்ளது.
- Oct 15, 2025 15:05 IST
16 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாயப்பு
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (அக்.15) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- Oct 15, 2025 15:04 IST
ஒரு பணியிடம்: 851 பேர் விண்ணப்பம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு 851 பேர் விண்ணப்பித்த நிலையில் 408 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள்; 8ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
- Oct 15, 2025 14:24 IST
கட்டண உயர்வு ஏன்? - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம்
ஆண்டுக்கு 35 நாட்கள் மட்டுமே ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இயக்க செலவு அதிகரிப்பினால் 13 பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல் கட்டணம் 20%, உதிரிபாகங்கள் 40% விலை உயர்ந்துள்ளதும் ஒரு காரணம். எனினும் தற்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
- Oct 15, 2025 13:39 IST
கரூர் நீதிமன்றத்தில் குவிந்த த.வெ.க தொணடர்கள் - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கைதான தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- Oct 15, 2025 13:34 IST
கவனத்தை ஈர்க்கவே செருப்பு வீச்சு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தண்ணீர் வேண்டும் என தவெக தலைவரின் கவனத்தை ஈர்க்கவே செருப்பை வீசியுள்ளனர் சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ளதால் உண்மை வெளியே வரும்; இதை திசைதிருப்ப வேண்டாம் என்று மின்சாரம் துண்டித்து செருப்பு வீசப்பட்டதாக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
- Oct 15, 2025 13:09 IST
த.வெ.க. நிர்வாகி ஜாமின் மனு: சிபிஐயை எதிர்மனுதாரராக இணைத்து மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகி பவுன்ராஜ் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக இணைத்து மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் தான் இல்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என அவர் தரப்பு வாதிட, இச்சம்பவத்தில் பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது அனைவருக்கும் பொறுப்புள்ளது என நீதிபதி கூறியுள்ளார்.
- Oct 15, 2025 12:41 IST
பீகார் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - பிரசாந்த் கிஷோர்
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவேன். அமைப்பு ரீதியான கட்சி பணிகளை மேற்கொள்வதால் தேர்தலில் போட்டி இல்லை என்று கூறியுள்ளார்.
- Oct 15, 2025 12:39 IST
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒற்றிணைக்க உறுதி ஏற்போம் - ஒ.பி.எஸ் பதிவு
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மனதில் நிலைநிறுத்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில், பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மனதில் நிலைநிறுத்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற 2026 ஆம்… pic.twitter.com/Rkhm3JgKLb
— O Panneerselvam (@OfficeOfOPS) October 15, 2025 - Oct 15, 2025 12:04 IST
மீட்புப்பணி நடந்துகொண்டிருக்கும்போதே 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரச்சார வாகனத்தை நிறுத்த கரூர் மாவட்ட எஸ்.பி. பலமுறை கூறியும் அதை நிறுத்தாமல் சென்றனர் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் வரை விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. மீட்புப்பணி நடந்துகொண்டிருக்கும்போதே 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- Oct 15, 2025 11:32 IST
போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 35 பேர் தப்பி ஓட்டம்
காஞ்சிபுரம், மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் காவலாளியை தாக்கி விட்டு தப்பி ஓட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- Oct 15, 2025 11:30 IST
டெல்லியில் பசுமை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் அனுமதி - உச்சநீதிமன்றம்
டெல்லியில் அக்.18 முதல் 21 வரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும், டெல்லியில் மாலை 6 - இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம், டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- Oct 15, 2025 11:28 IST
ரயில்களில் வடமாநில பயணிகள் அட்டூழியம் - நெறிப்படுத்த உத்தரவு
திருப்பூரில் முன்பதிவு பெட்டிகளில் வெளிமாநில தொழிலாளர்கள், பயணம் செய்ததால், டிக்கெட் முன்பதிவு செய்த பெண்களுக்கு இடம் கிடைக்காமல் பரிதவித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், இதன் எதிரொலியாக, முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்பவர்களை நெறிப்படுத்த ரயில்வே காவல் படைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
- Oct 15, 2025 11:23 IST
பீகார் சட்டசபை தோதல்: தொகுதி பங்கீடு முடிந்தும் தே.ஜ கூட்டணியில் குழப்பம் என தகவல்
பீகார் தேர்தலில் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த பின்னரும், தேசிய ஜனநாயக கூட்டணியில், மோதல் போக்கு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு கணிசமான இடங்கள ஒதுக்கியதால் தோழமை கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது, முதல்வர் நித்தீஷ் குமாரின் கோட்டைகளாக இருக்கும், ராஜ்கிர், சோன்பர்சா ஆகிய தொகுதிகளை சிராக் கேட்பதால் கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 15, 2025 10:23 IST
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அக்டோபர் 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 7 நாட்களுக்கு 7 முதல் 11 செ.மீ வழைர கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி, மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.