சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ அணைப்பதில் சிரமங்கள் இருந்தபோதிலும், கட்டிடத்தை புதுப்பிக்க தடையில்லா சான்றிதழ் (என்.ஓசி) வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் மார்ச் 2022-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) இணக்க தணிக்கை அறிக்கை புதன்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் மே 31, 2017-ல் தீ விபத்து ஏற்பட்டது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் 30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கு காரணம், பரபரப்பான சாலையில் அமைந்துள்ள கட்டடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இந்த தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஏணி, பிளாட்ஃபார்ம் வாகனம் ஆகியவை இடப்பிரச்னை காரணமாக பயன்படுத்த முடியாமல் போனதால், தீயை அணைக்க விமான நிலையத்தில் இருந்து தீயை அணைக்க வாகனம்கொண்டு வர வேண்டியிருந்தது.
தீ விபத்து பற்றிய விசாரணை அறிக்கையில் துறை கருதியதை விட, முன்மொழியப்பட்ட கட்டுமானத்தின் பக்கவாட்டு மற்றும் பின்புற பின்னடைவுகள் குறுகலாக இருந்த போதிலும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாக சி.ஏ.ஜி தணிக்கை கண்டறிந்துள்ளது. இது கட்ட அனுமதி மற்றும் தீ தடுப்பு பார்வையில் இருந்து உண்மையான தேவைகளை நிர்வகிக்கும் விதிகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு இல்லாததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
ஜனவரி 2023-ல், கட்டட உரிமம் வழங்குவது கட்டட உரிமம் வழங்கும் அதிகாரத்தின் விருப்பத்திற்குரியது என்று மாநில அரசு பதிலளித்தது. பதில் தணிக்கையின் அவதானிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது என்று சி.ஏ.ஜி குறிப்பிட்டது.
சென்னை சில்க்ஸ் தீ விபத்து மட்டுமில்லாமல், சி.ஏ.ஜி அறிக்கை, 2022 ஏப்ரலில் தஞ்சாவூரில் கோயில் தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்து, குப்பை கிடங்கில் தீ விபத்துகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநர் (DFRS) 2001-ம் ஆண்டிலேயே தற்காலிக கட்டமைப்பு மற்றும் பந்தல்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை முன்மொழிந்தாலும், முன்மொழியப்பட்ட மசோதா மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது தற்போதுள்ள சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது. இதனால், டி.எஃப்.ஆர்.எஸ்-ன் தீ தடுப்பு ஒப்புதல்கள் இல்லாமல் தற்காலிக கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியுள்ளது.
சிறிய மத விழாக்களுக்கு தீ தடுப்பு அனுமதி / தடையில்லா சான்றிதழ் தேவையில்லை என்று 2023 ஜனவரியில் மாநில அரசு பதிலளித்தது. குறைந்தபட்சம் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, டி.எஃப்.ஆர்.எஸ் அத்தகைய நிகழ்வுகளுடன் தொடர்புடைய அபாயங்களை மறுமதிப்பீடு செய்து பொருத்தமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தணிக்கைக் கண்டறிந்தது.
2022 ஏப்ரலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, 2,200 அரசு மருத்துவமனைகள்/சுகாதார மையங்களில் இத்துறை நடத்திய தீ தடுப்பு ஆய்வின்படி, 1,223 மருத்துவமனைகளில் தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. ஜூன் 2022-ல் அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை பெறப்பட்டதாக மாநில அரசு கூறியது. இருப்பினும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“