Advertisment

தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அஇஅதிமுக தான் - எடப்பாடி பழனிசாமி

AIADMK Election campaign :

author-image
WebDesk
New Update
தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அஇஅதிமுக தான் - எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, YMCA மைதானத்தில் நடைபெற்றது.

Advertisment

பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " சில புல்லுருவிகள் அஇஅதிகமுவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அஇஅதிமுக தான்' என்று தெரிவித்தார்.

பின்னர், பேசிய கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம், " புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார்.

அதிமுகவின் தேர்தல் பிரசாரப் பணிகளை துவக்கி வைக்கும் மாபெரும் இந்த பொதுக் கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி. பழனிசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக, இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியின் புரட்சி செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலர செய்து தமிழ்நாட்டை தொடர்ந்து வெற்றிப்பாதையில் நடைபோட செய்திடும் வகையிலும், வருகின்ற 27-ந்தேதி  தேர்தல் பிரசாரப் பணிகளை துவக்கி வைக்கும் மாபெரும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் களத்தில் கழகம் மகத்தான வெற்றிபெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம் தான் இப் பிரச்சார பொதுக்கூட்டம். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தேர்தல் பிரச்சார துவக்க பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், அதிமுக பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற இருக்கும் முதல்வர், துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை வழங்க அதிமுக மகளிர் அணி திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி எடப்பாடியில் உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் தொடங்கினார்.

சென்னையில் அமித் ஷா கலந்துகொண்ட அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ‘வருகிற தேர்தலில் பாஜக.வுடன் கூட்டணி தொடரும்’ என்று அறிவித்தனர். இருப்பினும், பாஜக உள்பட பாமக, தேமுதிக என அதிமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுகூட இதுவரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இன்றைய பொதுக் கூட்டத்தில் பாமக, தேமுதிக போன்ற கூட்டணிக் கட்சிகள்  அழைக்கப்படாமல் இருப்பது, அதிமுக கூட்டணிக்குள் ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்பதை வெளிபடுத்துகிறது.

 

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பின்னர் பாஜக தலைமை அறிவிக்கும் என்று பாஜக மகளிரணி அகில இந்திய தலைவரான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

எனவே, இன்றைய பிரச்சார பொதுக் கூட்ட மேடையில், முதல்வர் வேட்பாளர் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுக பகிரங்மாக சில கருத்துகளை முன்வைக்கலாக என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment