Tamil Nadu (TN) Assembly Election Results 2021 Coverage: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் தமிழகம் கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் மொத்தம் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 70% அதிகமான வாக்குகள் பதிவாகின.
மேலும் தமிழக அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் நடைபெற்ற இந்த தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகிய 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தரப்பில் வசந்த் விஜய் மற்றும் பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அதிமுக தலைவமையில், பாஜக, பாமக, தமக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணயிலும், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்தித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மே 6 முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனவும், பயணிகள் ரயில், பேருந்துகள், கார் டாக்ஸிகளில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசால் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 6 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக வரும் 7ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வை நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20952பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு என்ணிக்கை 12,28,064 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 122 பேர் கொரோனாவிற்கு பலியிகியுள்ளனர். இதில சென்னையில் ஒரே நாளில் 6150 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் மாஸ் அணிந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக புதிதாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பல தரப்பினரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், “இன மொழியை மீட்டெடுக்கும் உனது கரம்” – என்று கவிஞர் வைரமுத்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் அறையை காலி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தஆலோசனையில் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன்
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூரி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவருடன் திமுக இளைஞரணி செயலாளரும், தற்போதை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பாஜக உடன் கூட்டணி வைத்ததால் அதிமுக, பாமக தோல்வியை சந்தித்துள்ளன; தமிழகத்தின் சனாதன சக்திகளுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றி பெற்றதற்காக, மம்தா பானர்ஜியை நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக வரலாற்றில் புதிய அத்தியாயமாக தேர்தல் வெற்றிக்கு அதிமுக தலைவர் ஒருவர் திமுக தலைவரை போனில் வாழ்த்துவது இதுதான் முதல்முறை.
மாண்புமிகு @OfficeOfOPS அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன். https://t.co/cPSdRAMtoK
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021
கருணாநிதியின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து, வருங்கால தலைமுறைக்கான தலைவரென, ஸ்டாலின் முத்திரை பதிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகள் கோரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களான வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி ஆகியோரின் அடுத்தகட்ட முடிவு அவர்கள் கையில் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்ததை அவர் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி மாநில முதல்வராக வெள்ளி அல்லது ஞாயிறு அன்று ரங்கசாமி பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்றது. நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி ஆகியோர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை ஏதும் வரவில்லை என்று அவர் கூறினார்.
புதுவையில் முதல்வர் பொறுப்பு வகிக்க இருப்பது யார் என்று குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குர்மார் சுரானா, எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி முதல்வர் யார் என்ற முடிவை எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார்.
பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். புதிய சின்னத்தில் போட்டியிட்ட வி.சி.க. 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றும் நல்லாட்சியை வழங்கக் கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு என்றும் தொல்திருமாவளவன் கூறியுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டார் கே.எஸ். அழகிரி
முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிற ஆற்றலும், அனுபவமும் மிக்க திரு. @mkstalin அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.— KS_Alagiri (@KS_Alagiri) May 3, 2021
தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றிப் பெற்றதை அடுத்து ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது, கொரோனா கொடுந்துயரத்திலிருந்து தமிழகத்தை மீட்பதே ஸ்டாலின் முதன்மை பணி என அவர் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால், அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. கொலைகுற்றம் சுமத்தினாலும் குற்றமில்லை என வாய்மொழி கருத்தாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அந்த வார்த்தையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி என ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அதிமுக சார்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ, அவற்றை செவ்வனச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியை தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை எனவும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்! https://t.co/ukKeQXNkIq
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணன் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். இதனை அடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் தேர்வு செய்ய வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக சார்பில் போட்டியிட்ட சி.கே.சரஸ்வரி. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகிய நால்வரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு நுழைகிறது, பாரதிய ஜனதா கட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காபந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 3, 2021
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்
தேர்தல் தோல்வியை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். இன்று நன்பகலில் அந்த கடிதம் ஆளுநர் வசம் கிடைக்கப் பெறும் சூழலில், ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்பார்.
வரும் 7-ம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 3,417 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ள அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ, வெற்றிப் பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்காக உயிருள்ள வரை உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என ஸ்டாலினை வாழ்த்திய பின், இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மலேசிய மனித வளத் துறை அமைச்சர் டத்தோ சரவணன் வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம் என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். மதுரவாயில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெஞ்சமினும் தோல்வியுற்றுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, 15 இடங்களில் வெற்றியையும், 3 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது.
110 இடங்களில் திமுக வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னிலையில் இருந்த 22 தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெற்றி உறிதியாகி இருப்பதால், 20 இடங்களில் முன்னிலையுடன் 112 இடங்களில் தனித்த வெற்றியை திமுக பெற்றுள்ளது.
அதிமுக தனித்து 61 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 இடங்களில் முன்னிலை என்ற நிலை மாறி, 2 இடங்களில் வெற்றியுடன் 6 இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, 13 தொகுதிகளில் முழு வெற்றியையும், 5 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்து வருகின்றனர். இதுவரையில், 4.2% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 தொகுதிகளில் வெற்றியையும், 1 தொகுதியில் முன்னிலையிலும் இருந்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, பதிவான வாக்குகளில் 3.88%வாக்குகளை பெற்றுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்ட பாஜக, 3 தொகுதிகளில் வெற்றியையும், 1 தொகுதியில் முன்னிலையிலும் இருந்து வந்தாலும், பதிவான வாக்குகளில் 2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
59 இடங்களில் முழு வெற்றியையும், 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள அதிமுக, தேர்தலில் பதிவான வாக்குகளில் 33% வாக்குகளைப் பெற்றுள்ளது.
110 இடங்களில் முழு வெற்றியையும், 22 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் 37% வாக்குகளை பெற்றுள்ளது.
திமுக 110 இடங்களில் முழு வெற்றியையும், 22 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்து வருகின்றனர். மொத்தமாக 132 இடங்களில் திமுக வெற்றி உறுதியாகி உள்ளது.
அதிமுக வேட்பாளரக்ள் 59 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ளனர். தொடர்ந்து 8 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.