TN Assembly Highlights: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை- தங்கம் தென்னரசு

TN Assembly Updates: தமிழ்நாட்டில் எந்த வகையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது. நீர், நிலம் என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

TN Assembly Updates: தமிழ்நாட்டில் எந்த வகையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது. நீர், நிலம் என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Thangam Thennarasu speech on Central Govt Fund Distribution TN assembly Tamil News

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது- தங்கம் தென்னரசு

TN Assembly News: தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தியதும் கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து. 

Advertisment

தமிழக சட்டசபையின் 2-வது நாள் நிகழ்வுகள் அக்டோபர் 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு கைப்பட்டை அணிந்து, பங்கேற்றனர். கரூர் த.வெ.க. கூட்டநெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  விளக்கமளித்தார். அந்த கூட்டநெரிசல் சம்பவத்துக்கு த.வெ.க தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து சட்டசபையில் கரூர் சம்பவம் குறித்து பேசவிடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று 3-ம் நாள் தொடங்கியது. 

  • Oct 16, 2025 16:57 IST

    ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார்

    போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

    "ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான தொகையை வழங்க ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.



  • Oct 16, 2025 16:19 IST

    சமஸ்கிருத மொழிக்கு ரூ.2,345 கோடி ஒதுக்கீடு: வானதி சீனிவாசன் பேசியதற்கு சுவாமிநாதன் பதில்

    கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு மத்திய அரசு ரூ.167 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது; ஆனால் சமஸ்கிருத மொழிக்கு ரூ.2,345 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

     குடமுழுக்கு விழாக்களில் தமிழ், சமஸ்கிருதத்திற்கு சரியான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்ததோடு அமைச்சர் சுவாமிநாதன் எழுந்து பதில்.



  • Advertisment
    Advertisements
  • Oct 16, 2025 16:01 IST

    ஃபாக்ஸ்கான் என்பது தனி நிறுவனம் அல்ல: டி.ஆர்.பி.ராஜா விளக்கம்

    ஃபாக்ஸ்கான் என்பது தனி நிறுவனம் அல்ல, அதில் பல நிறுவனங்கள் உள்ளன; அதில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனம்தான் தமிழகத்தில் தொழில் தொடங்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளது; ஃபாக்ஸ்கானில் இடம்பெற்றுள்ள வேறு ஒரு நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ளது 

    - தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்.



  • Oct 16, 2025 15:31 IST

    சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு அன்புமணி கண்டனம்

    பாமகவின் புதிய பேரவைக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பற்றி தகவல் தெரிவித்து 22 நாட்கள் ஆன பிறகும் பேரவைத்தலைவர் அங்கீகரிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. பாமகவின் சட்டப்பேரவை நிர்வாகிகளை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்தால் அதற்கு எதிராகப் போராடத் தயங்க மாட்டோம்

    அன்புமணி அறிக்கை



  • Oct 16, 2025 15:17 IST

    தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது: தங்கம் தென்னரசு திட்டவட்டம்

    தமிழ்நாட்டில் நீர், நிலம் என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

    கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த உள்ளதை தடுக்க வேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ சட்டப் பேரவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்.



  • Oct 16, 2025 15:04 IST

    அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட கடனுக்கும் வட்டி கட்டும் தி.மு.க. அரசு - தங்கம் தென்னரசு பேச்சு 

    தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்றாம் நாள் அமர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "2020 - 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கால முடிவில் வாங்கப்பட்ட கடனுக்கு திமுக அரசு வட்டி கட்டி வருகிறது. அதிமுக விட்டுச்சென்ற கடனுக்கு மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டியுள்ளோம்.

    அதிமுக ஆட்சியில் மொத்த கடன் இருப்பு 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம்தான் கடன் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 128 சதவீதம் அதிகமா 93 சதவீதம் அதிகமா?மொத்த கடன் இருப்பு 128 சதவீதம் அதிகரிக்க செய்த நீங்கள் கடன் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நம்முடைய நிதி நிர்வாகம் இதற்கு காரணமாக இல்லை. சேராத இடங்களில் சேர வேண்டாம் என்று சொன்னதை மறந்து விட்டு நீங்கள் போய் சேர்ந்த கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ச்சியாக செயல்படுகிறது. என கூறினார்.



  • Oct 16, 2025 14:42 IST

    தி.மு.க.வுக்கு ஆதரவாக சபாநாயகர் ஜனநாயக படுகொலை செய்வதா? - அன்புமணி கேள்வி 

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிற்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் தி.மு.க.வுக்கு தாளம் போடுவவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் ஜனநாயகப் படுகொலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் எனது முன்னிலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டு புதிய தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனும், துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சிவக்குமார் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய நியமனங்களுக்கு அன்றே எனது தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 24-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு நான் முறைப்படி கடிதம் எழுதியிருந்தேன்.

    எனது கடிதத்தை கடந்த மாதம் 25-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு புதிய நிர்வாகிகளும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு அவர்களும் பேரவைத் தலைவரை சந்தித்து அளிக்க நேரம் கேட்டனர். அப்போது பேரவைத் தலைவர் சென்னையில் இல்லாத நிலையில், அவர் கேட்டுக் கொண்டவாறு பேரவைச் செயலாளரிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. பேரவைத் தலைவரிடமும் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டுக் கொண்ட பேரவைத் தலைவர் விதிமுறைகளின் படி விரைந்து முடிவெடுத்து அறிவிப்பதாக பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

    அதற்கு முன்பாகவே கட்சித் தலைவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக கடந்த ஜூலை 3-ம் நாள் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அருள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் அன்றைய தினமே பேரவைத் தலைவரிடம் தெரிவித்திருந்தோம். அதன் மீதும் விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

    ஆனால், அதன்பின் இன்றுடன் 22 நாள்களாகிவிட்ட நிலையில் பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றி விட்டு, அப்பதவிக்கு புதிதாக தேந்தெடுக்கப்பட்டவரை பேரவைத் தலைவர் அங்கீகரிக்கவில்லை. பேரவைக் கூட்டம் தொடங்கிய நாளில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சி நிர்வாகிகளும், வழக்கறிஞர் பாலுவும் மீண்டும் பேரவைத் தலைவரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்கள். அப்போது எனது கடிதம் ஆய்வில் இருப்பதாகக் கூறிய பேரவைத் தலைவர், அவை முன்னவரான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசும்படி கூறினார்.

    அதன்படியே பா.ம.க. குழுவினர் முன்னவர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள். அவரும் பேரவைத் தலைவரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். ஆனால், அதன்பின் இரு நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்று கூறிக் கொண்டு ஜி.கே.மணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நியாயமற்றவை.

    இந்த சிக்கல் குறித்து பேரவைத் தலைவரிடம் கேட்கும் போதெல்லாம், இது குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என்ற பழைய பல்லவியையே அவர் மீண்டும், மீண்டும் பாடி வருகிறார். இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? என்பது தான் தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். மீதமுள்ள நால்வரின் மூவர் கூடி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மூவரும் நேரடியாகவே பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். எனது தலைமையில் செயல்படும் கட்சிதான் பா.ம.க. என்று தேர்தல் ஆணையமும் அறிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தெளிவான முடிவை எடுக்காமல் ஆய்வு செய்து வருகிறேன் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறிவருவதில் பெரும் உள்நோக்கம் இருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல், விளம்பரங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாகவே காலம் தள்ளிவரும் தி.மு.க. அரசு, அதற்காகவே பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் தாளம் போட சிலரை வைத்திருக்கிறது. அவ்வாறு தாளம் போடுவர்கள் இருந்தால் தான் தங்களுக்கு பிழைப்பு நடக்கும் என்பதற்காகவே ஜனநாயக முறையில் பாட்டாளி மக்கள் கட்சின் சட்டமன்றக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை அங்கீகரிக்காமல் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களை பதவியில் நீடிக்க அனுமதிப்பது நியாயமல்ல.

    வலிமையாக செயல்படும் கட்சிகளையெல்லாம் உடைத்து, அதில் ஒரு பிரிவை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பது தி.மு.க.வின் கலை ஆகும். அதே ஆயுதத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் தி.மு.க. பயன்படுத்தி வருகிறது என்று ஏற்கனவே நான் குற்றஞ்சாட்டியிருந்தேன். அதற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்கத் துடிப்பதன் மூலம் எனது குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது. தி.மு.க. ஏவிய ஆயுதம் முனை மழுங்கி மொக்கையான பிறகும் அக்கட்சித் தலைமை திருந்த மறுக்கிறது.

    பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று முழங்கிய தி.மு.க.வும், அதற்கு தோள் கொடுத்து வரும் பேரவைத் தலைவரும் பேரவைக் குழு நிர்வாகிகள் நியமனத்தில் மட்டும் காலவரையே இல்லாமல் ஆய்வு செய்வோம் என்பது என்ன நீதி? தங்களுக்கு ஒரு நீதி.... எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கையா?

    பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த நொடியே அரசியல் அடையாளங்களை இழந்து விடுகிறார். நீதி பிறழாது நடுநிலையுடன் செயல்படுவதுதான் அவரது பணி ஆகும். தி.மு.க.வைச் செர்ந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் போன்ற பெருந்தகையாளர்கள் அப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர்பவர்கள் அதேபோல் செயல்படுவதன் மூலம்தான் அந்த இருக்கைக்கு பெருமை சேர்க்க முடியும். எனவே, ஆளுங்கட்சியின் விருப்பப்படி, ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்துவதை விடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜனநாயகப் படுகொலை தொடர்ந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 16, 2025 14:33 IST

    டிச.15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை - பேரவையில் உதயநிதி தகவல் 

    முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிகளை தளர்த்தியுள்ளார் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பல மகளிர் பயனடையும் வகையில் உரிமைத் தொகை திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் டிசம்பர் 15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

     



  • Oct 16, 2025 13:07 IST

    தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும்: சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா பேச்சு

    தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன் மூலம் 14 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சட்டப்பேரவையில் தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றும் விகிதம் தற்போது 77% எனவும் அவர் கூறினார். அண்டை மாநிலங்களுக்கு சென்ற முதலீடுகளில் அரசியல் காரணிகள் உள்ளதாகவும், வேலைவாய்ப்பாக மாறும் முதலீடுகளில்தான் தமிழக அரசு ஒப்பந்தம் கையெழுத்திடும் எனவும் வலியுறுத்தினார். ஆந்திராவில் கூகுள் முதலீடு குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூகுள் பிரச்சனையில் அதானியின் தலையீடு இருப்பதாகவும், இது அமெரிக்கா–இந்தியா இடையிலான பிரச்சனை என்பதால் இதில் அரசியல் செய்யக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.



  • Oct 16, 2025 12:37 IST

    அதிமுக ஆட்சியில் வைத்து சென்ற கடனுக்கு ரூ.1.40 லட்சம் வட்டி செலுத்தி வருகிறோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

    அதிமுக ஆட்சியில் வைத்து சென்ற கடனுக்கு ரூ.1.40 லட்சம் வட்டி செலுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறானது என்று கூறிய அவர், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த போது ரூ.4.8 லட்சம் கோடி கடன் இருந்தது என்று குறிப்பிட்டார்.



  • Oct 16, 2025 12:14 IST

    தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

    தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நிதி பிரச்சனையில் அக்கறை இருந்தால் அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுங்கள். நிதி பிரச்சனை குறித்து ஜி.எஸ்.டி.கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு துரோகத்துக்கும் கொடுமைக்கும் ஆளாகவேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.



  • Oct 16, 2025 12:14 IST

    சித்த பல்கலை. மசோதா:ஆளுநர் பரிந்துரைகள் நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

    சித்த பல்கலை. மசோதாவிற்கு ஆளுநர் பரிந்துரைகள் நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லாததால் அவரது பரிந்துரைகளை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.



  • Oct 16, 2025 11:47 IST

    நயினார் நாகேந்திரன் பிறந்த நாள்- சட்டசபையில் ஸ்டாலின் வாழ்த்து

    தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நயினார் நாகேந்திரன், கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடத்திலும் அன்போடும், அமைதியோடும் பேசக்கூடியவர்.  அவர் கோபமாக பேசி இதுவரை நான் பார்த்ததில்லை. வெளிநடப்பு செய்யும் போதும் சிரித்துகொண்டே யாருக்கும் கோபம் வராத வகையில் அணுகக்கூடியவர் என்றார்.



  • Oct 16, 2025 11:38 IST

    கிட்னி திருடிய மருத்துவமனை மீது தி.மு.க நடவடிக்கை எடுக்கவில்லை - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

    ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்றார்.



  • Oct 16, 2025 11:20 IST

    உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் குறித்த கேள்வி - எ.வ.வேலு பதில்

    விளவங்கோடு உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் 15பி மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது என்று தாரகை கதபட் கேள்வி எழுப்பினார். அதற்கு, மத்திய மாநில அரசுகள் 50 சதவிகிதம் நிதி ஒதுக்கி பாலம் கட்டுகின்றன, முழு தொகையும் மாநில அரசே செலவிட்டு பாலம் கட்ட முதல்வர் அனுமதி தேவை. கோரிக்கையை எழுத்துபூர்வமாக வழங்குங்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.



  • Oct 16, 2025 11:01 IST

    நிலக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம்? கே.என்.நேரு சொன்ன தகவல்

    நிலக்கோட்டை பேருந்து நிலையம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றது என்று அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். பைபாஸ் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பைசாஸ் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் இருக்குமானால் அதை பெற்று கட்டிடம் கட்டி தருகிறோம் என்றார்.



  • Oct 16, 2025 10:54 IST

    மதுரை மாவட்டம் பாலம் வேலை எப்போது முடியும்? செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில்

    தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தான் மதுரைக்கு விடிவு காலம் வந்தது. கோரிப்பாளையம் பாலத்தின் பணிகளை ஜனவரி மாதம் திறக்கலாம் என்று முடிவு செய்து தொடர்ந்து பணிகளை செய்து வருகிறோம். அடுத்ததாக அப்பல்லோ மருத்துவமனை பாலம் வேலையும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படும் என்றார்.



  • Oct 16, 2025 10:47 IST

    விரகனூர் அணை சுற்றுலா தளம் குறித்த கேள்வி - பதிலளித்த துரைமுருகன்

    மதுரை மாவட்டம் விரகனூர் அணை சுற்றுலாத் தளத்தை புனரமைப்பது தொடர்பாக ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அந்த கோரிக்கை எழுதி கொடுக்கிறேன் என்று கூறினார்.



  • Oct 16, 2025 10:41 IST

    உறுப்பினர் வைத்த கோரிக்கை - விளக்கம் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

    வாசு தேவன் பட்டு, அல்லியந்தல் உள்ளிட்ட ஏரிகளை இணைக்க உறுப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த துரைமுருகன் இந்த ஏரிகளில் நீர் ஆதாரம் இருந்தாலும் வனதுறையில் இருந்து பத்து ஏக்கர் நிலம் எடுக்க வேண்டியது இருக்கும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் இது பற்றி பேசுவோம் என்றார்.



  • Oct 16, 2025 10:12 IST

    கிட்னிகள் ஜாக்கிரதை - சட்டசபைக்கு பேட்ச் அணிந்து வந்த அ.தி.மு.க-வினர்

    சட்டசபைக்கு கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ச் அணிந்து கொண்டு அ.தி.மு.க-வினர் வந்துள்ளனர். நேற்று கையில் கருப்பு பட்டை கட்டிக் கொண்டு வந்த நிலையில் இன்று கிட்னிகள் ஜாக்கிரதை என பேட்ச் அணிந்து வந்துள்ளனர்.



  • Oct 16, 2025 09:55 IST

    சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல்

    தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய உள்ளது. 



  • Oct 16, 2025 09:54 IST

    கிட்னி படத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

    சட்டப்பேரவை வளாகத்திற்கு கிட்னி படத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர். 



  • Oct 16, 2025 09:32 IST

    அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை

    பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.



  • Oct 16, 2025 08:37 IST

    மூன்றாம் நாள் கூட்டம்

    தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று மூன்றாம் நாள் தொடங்கவுள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     



  • Oct 16, 2025 08:36 IST

    2 ஆவது நாள் கூட்டத்தின் நிகழ்வுகள்

    தமிழக சட்டசபையின் 2-வது நாள் நிகழ்வுகள் அக்டோபர் 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு கைப்பட்டை அணிந்து, பங்கேற்றனர். கரூர் த.வெ.க. கூட்டநெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  விளக்கமளித்தார். அந்த கூட்டநெரிசல் சம்பவத்துக்கு த.வெ.க தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து சட்டசபையில் கரூர் சம்பவம் குறித்து பேசவிடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர்.



  • Oct 16, 2025 08:36 IST

    முதல் நாள் கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்

     தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தியதும் கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து. 



  • Oct 16, 2025 08:32 IST

    பொய்யான தகவலை பேசி வரும் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  சட்டமன்றத்தில் தோல்வியை கண்டு பொய்யான பல செய்திகளை பரப்பி வருகிறார். சட்டமன்றத்தில்  தர்ணா செய்பவர்களை சட்டமன்ற காவலர்கள் வெளியேற்றுவார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதை நீக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அதை பார்த்து பரிசீலித்து நீக்குகிறோம் என்று சொன்ன பின்பும் அ.தி.மு.க-வால் அதை சொல்ல முடியவில்லை என்றார்.



Tn Assembly Tamil Nadu Assembly Stalin Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: