Advertisment

ஈஷா யோக மையம் பற்றிய கேள்வி: சக அமைச்சருக்கு பாடம் எடுத்த துரைமுருகன்

"பத்திரிகை செய்திகளில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வருகின்றன. எனவே வனத்துறை அமைச்சகம் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னுமா ஆய்வு செய்யவில்லை?" என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
TN assembly minister Durai Murugan lesson to forest minister on Isha Yoga Center Coimbatore issue Tamil News

அமைச்சர் துரைமுருகனுக்கு 50 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக இருந்து அனுபவம் உள்ளது. ஆனால் மதிவேந்தன் முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக தொடங்கி நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசன் மவுலானா, 'கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டு உள்ளது என்கிறார்களே, இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தனின் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்று கேள்வி எழுப்பினார். 

Advertisment

அப்போது குறுக்கிட்ட அப்பாவு, இதெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுதி கொடுத்திருந்தால் விவாதிக்கலாமே என்று கூறினார். அப்போது எழுந்து நின்ற வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், "யானைகளின் வழித்தடம் குறித்து பெரும்பாலானோருக்கு பாதியளவுக்குத்தான் அறிவு இருக்கிறது. அதனால்தான் யானைகள் வழித்தடம் குறித்து நான் விளக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் உறுப்பினர் ஈஷா மையம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிய முதல்வர் தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை வைத்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். யானை நிபுணர்களையும் வைத்தும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், உறுப்பினர் கேட்ட கேள்வி, யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ளதா? இல்லையா? என்பதுதான். இதை அமைச்சர் வாயிலாக நேரடியான பதிலை அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் அதே பதிலை தெரிவித்தார்.

அதற்கு துரைமுருகன், "பத்திரிகை செய்திகளில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வருகின்றன. எனவே வனத்துறை அமைச்சகம் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னுமா ஆய்வு செய்யவில்லை? இன்று வரை ஏன் ஆய்வு செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். இது இரு அமைச்சர்களிடையே வாக்குவாதம் எழுந்தது போல் இருந்தது.

அமைச்சர் துரைமுருகனுக்கு 50 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக இருந்து அனுபவம் உள்ளது. ஆனால் மதிவேந்தன் முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகியுள்ளார். இது போன்ற கேள்வி நேரங்களின் போது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டவே இப்படி பேசினார் என சொல்லப்படுகிறது.

பொதுவாக எதிர்க்கட்சிகள்தான் இது போன்று விமர்சிக்கும் வகையில் கேள்விகளை முன் வைக்கும். ஆனால் ஆளும் கட்சி அமைச்சரே மற்றொரு அமைச்சரை கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Duraimurugan Tn Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment