தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை 2021 ஏப்ரலில் 7,536 கிலோ லிட்டரில் இருந்து 2024 ஏப்ரலில் 1,084 கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூன் 27) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர், மாநிலத்தில் அதிக எல்பிஜி எரிவாயு இணைப்புகளை காரணம் காட்டி மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது.
சேர்வராயன் மலை, கல்வராயன் மலை போன்ற மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மண்ணெண்ணெய் தேவை. மாநில அரசிடம் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு இன்னும் ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை.
மேலும் மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை ஜூலை மாத முதல் வாரத்துக்குள் விநியோகித்து முடிக்கப்படும்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15,79, 393 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்காக பெறப்பட்ட 2.9 லட்சம் விண்ணப்பங்களில் 9,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேசன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன.
மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும், என்று சக்கரபாணி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“