/indian-express-tamil/media/media_files/gVso9XViW96qic9dtfRY.jpg)
Tamil Nadu News Today, MK Stalin
Tamilnadu: ஆண்டின் முதல் கூட்டத் தொடர்: தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பேரவையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி எவ்வளவு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.
ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு. 2024-25-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 12, 2024 13:02 IST
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் - கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்
"இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 12, 2024 13:01 IST
"மன பக்குவம் இல்லை" - அமைச்சர் ரகுபதி
"தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளுகிற மன பக்குவம், தாங்கி கொள்ளும் சக்தி ஆளுநருக்கு இல்லை.
ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசின் உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட ஆளுநர் பேசவில்லை.
உரையில் உள்ளதை பேசாமல், தனது சொந்த கருத்தை பேசியுள்ளார் ஆளுநர். கேரள ஆளுநராவது, உரையில் இருந்த ஒருசில வரிகளையாவது பேசினார்." என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
Feb 12, 2024 12:43 IST
சிறுபிள்ளைத்தனமானது - சிந்தனை செல்வன் பேச்சு
"தேசிய கீதத்தை ஒருமுறை பாடினால் தேச பக்தி இல்லை என்பது போலவும், இரு முறை பாடினால் தேச பக்தி அதிகம் என்பது போலவும் ஆளுநர் சித்தரிக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது” என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கூறியுள்ளார்.
-
Feb 12, 2024 12:33 IST
இதுதான் அவரின் கடைசி பேச்சு - சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன்
" தமிழத்தில் நிகழ்ச்சிகள் முடிந்து பின்னர் தான் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். அதுகூட தெரியாத கவர்னராக இருக்கிறார். இதுதான் அவரின் கடைசி பேச்சு" என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் கூறியுள்ளார்.
-
Feb 12, 2024 12:29 IST
தேசிய கீதம் இசைத்துதான் ஆளுநரை அழைத்து வந்தோம் - சபாநாயகர் அப்பாவு
"முதலில் தமிழ்தாய் வாழ்த்து, பிறகு ஆளுநர் உரை, இறுதியாக தேசியகீதம் என்பதே அவை மரபு. பேரவை விதிகளின்படியே முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தேசிய கீதம் இசைத்துதான் ஆளுநரை அழைத்து வந்தோம். ஆளுநரின் சொந்தக்கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம். அவை மரபை மீறி ஆளுநர் செயல்படுவது முறையற்றது, நாகரீகமற்றது" என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
Feb 12, 2024 12:13 IST
20ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
"பிப்ரவரி 13,14 ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 15ம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கப்படும்.
பிப்ரவரி 20ம் தேதி 2024 -25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 21ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். 22ம் தேதி பதிலுரை வழங்கப்படும" என்றும் பாநாயகர் அப்பாவு தெரிவித்துளளார்.
-
Feb 12, 2024 12:10 IST
'ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்'- இ.பி.எஸ் விமர்சனம்!
"தமிழக அரசு தயாரித்த உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்" என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
Feb 12, 2024 12:07 IST
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதே வழக்கம் - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
"எந்த அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதே வழக்கம். ஆளுநர் இறுதிவரை அவையில் இருந்ததால், உரையை ஏற்றுக்கொண்டதாக கருதுகிறோம்." என்று தி.மு.க-வின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியுள்ளார்.
-
Feb 12, 2024 12:06 IST
22ம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர்
வரும் 22ம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீது விவாதம், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்குவார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
Feb 12, 2024 12:05 IST
ஆளுநர் கருத்துகள் நீக்கம்
ஆளுநரின் சொந்தக் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
Feb 12, 2024 11:46 IST
ஆளுநர் அவையில் மேற்கோள் காட்டிய குறள்
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து" என்கிற குறளை ஆளுநர் அவையில் மேற்கோள் காட்டினார். -
Feb 12, 2024 11:27 IST
பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்
அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது.
-
Feb 12, 2024 11:27 IST
கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு
சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது.
-
Feb 12, 2024 11:23 IST
சபாநாயகர் மரபை மீறியுள்ளார் - பா.ஜ.க
"அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசியுள்ளார். தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை. சபாநாயகர் மரபை மீறியதால் ஆளுநர் வெளியேறினார். சபாநாயகர் தேவையில்லாத விஷயத்தை பேசியதால் ஆளுநர் வெளியேறினார். கோட்சே என்று கூறி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றியுள்ளார்." என்று பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
Feb 12, 2024 11:11 IST
பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்
அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
-
Feb 12, 2024 11:04 IST
சட்டப் பேரவையில் இருந்து புறப்பட்ட ஆளுநர் ரவி
அமைச்சர் துரைமுருகன் பேச தொடங்கியதும், சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Feb 12, 2024 11:02 IST
சி.ஏ.ஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: அப்பாவு
ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப் போவதில்லை என்பதில் அரசு உறுதி.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை- சபாநாயகர் அப்பாவு
-
Feb 12, 2024 10:47 IST
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது என்ன?#SunNews | #TNAssembly2024 | #RNRavi pic.twitter.com/JAUtbq8L2T
— Sun News (@sunnewstamil) February 12, 2024 -
Feb 12, 2024 10:37 IST
உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள்: ஆளுநர்
தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்
அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை
உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், முழுமையாக வாசிக்க விரும்பவில்லை
வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என கூறி 2 நிமிடங்களில் உரையை முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Feb 12, 2024 10:35 IST
தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி புகார்
சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் தேசிய கீதம் படிக்கப்பட வேண்டும். தேசிய கீதத்திற்கு பேரவையில் உரிய மரியாதை அளிக்கப்பட வில்லை. தேசிய கீதத்துடுன் எனது உரை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட வில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Feb 12, 2024 10:32 IST
உரை கருத்துகளுடன் முரண்படுகிறேன்: ஆளுநர்
உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுடன் முரண்படுகிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Feb 12, 2024 10:31 IST
சில நிமிடங்களிலேயே ஆளுநர் உரை நிறைவு
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக படிக்காமல் சில நிமிடங்களிலேயே நிறைவு செய்தார் -
Feb 12, 2024 10:24 IST
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை மரியாதை உடன் வரவேற்பு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை மரியாதையுடன் வரவேற்பு
காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Feb 12, 2024 09:29 IST
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்: இ.பி.எஸ் வருகை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ள நிலையில், சட்டமன்ற வளாகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை
-
Feb 12, 2024 08:50 IST
அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
-
Feb 12, 2024 07:47 IST
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.