/indian-express-tamil/media/media_files/2025/10/02/tn-assembly-2025-10-02-18-24-16.jpg)
TN Assembly Oct 14 Chennai Police Commissioner Arun
சென்னை: வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதை முன்னிட்டு, தலைநகரில் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல்துறையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் சென்னை காவல் ஆணையர் அருண், பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களுடன் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இது குறித்துக் காவல்துறை அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் பின்வருமாறு:
தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு விதிமுறைகள்
தலைமை செயலகத்திற்குள் நுழையும் அனைத்துப் பொதுமக்களும் கட்டாயச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சட்டப்பேரவை வளாகத்திற்குள் எக்காரணம் கொண்டும் எந்தவிதமான துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்க அனுமதி இல்லை.
தலைமைச் செயலகத்தைச் சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்படுதல் கூடாது என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல் நிலைய நடைமுறைகள் குறித்த முக்கிய உத்தரவுகள்
காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்தும் ஆணையர் அருண் மிகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
காவல் ஆய்வாளரின் முன் அனுமதியின்றி எந்த ஒரு சந்தேக நபர்களையும் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக் கூடாது.
விசாரணையின் போது, கைதிகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படக் கூடாது.
மேலும், விசாரணை கைதிகளைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.