அ.தி.மு.க அமளி... வெளியேற்றிய சபாநாயகர்: இ.பி.எஸ் பரபர குற்றச்சாட்டு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
TN Assembly session AIADMK walkout EPS PRESS MEET speaker M Appavu Tamil News

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தற்போது கேள்வி நேரமும், துறைரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

Advertisment

இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அவையின் மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை. மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை. குடும்பத்தைப் பற்றி மட்டுமே தி.மு.க. அரசு கவலை கொள்கிறது. உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப்பொருளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இன்றைய தினம் எங்களை திட்டமிட்டு சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். எவ்வளவு முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடை படக்கூடாது என்று நினைக்கின்றனர்." என்று அவர் கூறியுள்ளார். 

appavu Edappadi K Palaniswami Tamilnadu Assembly

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: