முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில், முன்வைத்த தீர்மானத்தில், ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், மாநில சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டபேரவையில், நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த தீர்மானத்தில், ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“சட்டப்பேரவையின், இறையாண்மை, இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள தமிழக ஆளுநரின் செயலை இந்த சட்டப்பேரவை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது. மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் அவர் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்” என்று தீர்மானம் கூறுகிறது.
மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநரின் சர்ச்சைக்குரிய பொதுக் கருத்துகளையும் இந்த தீர்மானம் விமர்சித்துள்ளது. மேலும், இந்த தீர்மானம், “அவர் வகிக்கும் பதவி, அவர் எடுத்த உறுதிமொழி மற்றும் மாநில நிர்வாகத்தின் நலன் ஆகியவற்றுக்கு ஏற்ப இல்லை” என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பின்பற்றப்படும் நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராகவும், இந்த அவையின் கண்ணியத்தைக் குறைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாதிக்கத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவியை குற்றம் சாட்டியது.
“தமிழக சட்டப்பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டவும், மாநில மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதைத் தடுக்கும் முயற்சியில், மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஆளுநருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இச்சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் தீர்மானத்தில் வலுயுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் மீண்டும் மாநில அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்துக்கும் இடையே நிலவும் பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
மாநில சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின், அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“ஆளுநர் பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாகவும் மாநில நலனுக்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் மீண்டும் மீண்டும் செயல்படும்” ஆ.ர்.என் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், 1975-ம் ஆண்டு ஷம்ஷேர் சிங் எதிரி பஞ்சாப் மாநிலம் வழக்கில் (1975) உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார். மாநில அரசு மற்றும் குடியரசுத் தலைவர் என்பதற்கான கையெழுத்து என்பது மத்திய அரசாங்கத்தின் விரிவாக்கம்” என்றும் அவர் தன்னை பெரிய சர்வாதிகாரி என்று அவர் நினைக்க வேண்டாம்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஆர்.என். ரவி தனது நிர்வாகப் பணிகளில் தோல்வி அடைந்துவிட்டார், அதிலிருந்து தப்பி நழுவுகிறார்” என்று குற்றம் சாட்டிய மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்கள் ராஜ்பவனில் நிலுவையில் உள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது என்பது ஆளுநர் அந்த மசோதாவை வைத்திருக்கிறார் என்று அர்த்தமல்ல. மாறாக அந்த மசோதா நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு, கடந்த வாரம் மு.க. ஸ்டாலினிடம் இருந்து கடுமையான எதிர்வினை வந்தது. ராஜ்பவனில் குடிமைப் பணி மாணவர்களின் கூட்டத்தில் வியாழக்கிழமை பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நிராகரிக்கப்பட்டது என்ற வார்த்தைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் கண்ணியமான வார்த்தைதான் நிலுவையில் உள்ளது” என்று பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.