Advertisment

சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய சபாநாயகர்; 'இது புதுசு' சுட்டிக்காட்டிய துரைமுருகன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சபாநாயகர் எம். அப்பாவு கேள்வி எழுப்பியது உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
appavu duraimurugan

“கேள்வி நேரத்தில் சபாநாயகரே கேள்வி கேட்பதை நான் பார்க்கிறேன்” என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சபாநாயகர் எம். அப்பாவு கேள்வி எழுப்பியது உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “கேள்வி நேரத்தில் சபாநாயகரே கேள்வி கேட்பதை நான் பார்க்கிறேன்” என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.

Advertisment

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள், ஆளும் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

இந்த சூழலில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 21-ம் தேதி கூடியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. 

தமிழ்நாடு சட்டபேரவை கள்ளக்குறிச்சி சம்பவத்தால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இப்படி அமலியுடன் தொடங்கிய நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, சட்டப்பேரவையில் சபாநாயகர் எம். அப்பாவு கேள்வி எழுப்பியது உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சட்ட அமைச்சகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த போது, சபாநாயகர் ​​அப்பாவு குறுக்கிட்டு, “மாண்புமிகு அமைச்சரிடமும் ஒரு கேள்வி உள்ளது” என்றார்.

திசையன்விளை தாலுக்கா உத்தரவில் முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எப்போது நிறுவப்படும் என்பதை அவர் அறிய விரும்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், நீதிமன்றத்தை அமைப்பதற்கான பணிகளை உயர்நீதிமன்றம் விரைவில் தொடங்கும் என்றும் எந்த தடையும் இல்லை என்றும் கூறினார்.

சபாநாயகர் அப்பாவு கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்தபோது, ​​தி.மு.க அவை முன்னவர் துரைமுருகன், “நான் கேள்வி நேரத்தில் சபாநாயகரே கேள்வி கேட்பதைப் பார்க்கிறேன், இது புதுசு” என்றார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு,  “மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்காக நான் கேள்வி கேட்க வேண்டும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

appavu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment